Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!

Recommended Video

IND vs AUS 3rd ODI | India won the series | ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என கைப்பற்றியது இந்திய அணி.

மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய முதலில் பேட்டிங் செய்து 286 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தார். ஆனால், அந்த இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெற்றது இந்திய அணி. ரோஹித், கோலி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்ததால். மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் நிலை இருந்தது.

மோசமான துவக்கம்

மோசமான துவக்கம்

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. வார்னர் 3 ரன்களில் ஷமியிடம் வீழ்ந்தார். ஆரோன் பின்ச், ஸ்மித் செய்த குழப்பத்தால் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

ஸ்மித் சதம்

ஸ்மித் சதம்

அதன் பின் ஸ்டீவ் ஸ்மித் - லாபுஷாக்னே இணைந்து அபாரமாக ஆடினர். லாபுஷாக்னே 54 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்கள் குவித்தார். அலெக்ஸ் கேரி 35 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்து நடையைக் கட்டினர். ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 286 ரன்கள் எடுத்தது. ஷமி 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

பும்ரா 38 ரன்களும், ஜடேஜா 44 ரன்களே கொடுத்து கட்டுக் கோப்பாக வீசினர். ஷமி, சைனி, குல்தீப் மூவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்து வாரி இறைத்தனர். சைனி 1, குல்தீப் 1, ஜடேஜா 2, ஷமி 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தவான் நிலை

தவான் நிலை

தவான் காயம் காரணமாக பேட்டிங் செய்ய முடியாத நிலை இருந்தது. அதனால், ராகுல், ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர். இந்திய அணி ஒரு முக்கிய பேட்ஸ்மேன் இல்லை என்ற அழுத்தத்துடன் சேஸிங் செய்யத் துவங்கியது.

ராகுல் ஏமாற்றம்

ராகுல் ஏமாற்றம்

ராகுல் 19 ரன்களே எடுத்து வெளியேறினார். அதன் பின் கூட்டணி அமைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி விக்கெட் வீழ்ச்சி அடையாமல் நிதானமாக ரன் குவித்தனர்.

பேட்டிங் அபாரம்

பேட்டிங் அபாரம்

ரோஹித் சர்மா ஆறு சிக்ஸர்களுடன் 119 ரன்கள் குவித்தார். விராட் கோலி 89 ரன்கள் குவித்து வெற்றிக்கு மிக அருகே ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் தேவை உணர்ந்து 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து, சேஸிங்கை எளிதாக முடிக்க உதவினார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்தியா 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஸ்டார்க் ஓவருக்கு 7.33 ரன்களும், பாட் கம்மின்ஸ் 9.14 ரன்களும் வாரி இறைத்து இருந்தனர்.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித், கோலி முக்கிய காரணம் என்றாலும், பந்துவீச்சும் முக்கிய காரணம் தான். பும்ரா, ஜடேஜா ரன் கொடுக்காமல் இருந்ததும், ஷமி கடைசி நேரத்தில் ரன் குவிப்பை தடுத்து விக்கெட் வேட்டை நடத்தியதும் பெரிதும் உதவியது.

Story first published: Sunday, January 19, 2020, 22:14 [IST]
Other articles published on Jan 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+