Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேலையை விட்டு நீக்க கார்ப்ரேட் நிறுவனம் செய்யும் வழி இது.. ரோகித், கோலி நேர்ந்த கதி.. சடகோபன் ரமேஷ் தாக்கு

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சேர்க்கப்பட்டாலும் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் 50 ஓவர் உலகக் கோப்பையில் இருவரும் விளையாடுவது குறித்து எந்த ஒரு உறுதியான தகவலையும் அஜித் அகார்கர் கூறவில்லை. பிசிசிஐயின் இந்த செயலுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபம் ரமேஸ் தேர்வு குழுவின் முடிவை கார்ப்பரேட் நிறுவனம் செய்வது போல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

sadagopan ramesh

இது குறித்து பேசிய அவர், இந்திய அணியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் திரும்பி இருக்கிறார்கள் என்று நினைத்து நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் தேர்வுக்குழு தேவையே இல்லாமல் இருவரும் மீதும் கூடுதல் நெருக்கடியை சுமத்திருக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் உங்களை நேரடியாக வேலையை விட்டு நீக்காது.

அதற்கு பதிலாக மறைமுகமாக உங்களுக்கு நெருக்கடியை அளித்து நீங்களே பணியை விட்டு செல்லும் வழி செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு யுத்தியை தான் தற்போது இந்திய அணி நிர்வாகம் பின்பற்றி வருகிறது என்று நினைக்கின்றேன். இந்த இந்திய அணியில் ஒரே ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்றால் துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் தனது தலைமை பண்பை அவர் சிறப்பாக வெளிக்காட்டிருக்கின்றார். தற்பொழுது ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நல்ல பேட்ஸ்மேன் ஆக அவர் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும். அது மிகவும் முக்கியம். இதேபோன்று ஜெயஸ்வால் அணிக்குள் வந்திருப்பதும், ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கின்றேன்.

தற்போது ஜடஜாவையும் ஒரு நாள் அணியை விட்டு நீக்கி இருக்கிறார்கள் அவர் என்ன கூடுதல் சுமையாகவா அணியில் இருக்கிறார். அவர் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் ஜாம்பவான். கூடுதல் வீரர் வேண்டும் என்பதற்காக ஜடேஜாவை சேர்ப்பீர்களா? என்னைக் கேட்டால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக தான் அவருக்கு t20-ல் துணை கேப்டன் பதவியில் ஒரு நாள் கேப்டன் பதவியும் கொடுத்திருக்கிறீர்கள்.ஆனால் அதே தொடரில் ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பதை மறந்து விட வேண்டாம். கில் மற்றும் துருவ் ஜூரலுக்கு ஒரு நாள் அணியில் இடம் கொடுத்துவிட்டு ஜடேஜாவுக்கு குட் பாய் சொல்லிவிட்டார்கள் என்று சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, October 5, 2025, 18:41 [IST]
Other articles published on Oct 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+