Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- இந்திய அணியின் நம்பிக்கை குறைவாக இருக்கு! பயிற்சி ஆட்டம் ஏன் விளையாடவில்லை -பாசித் அலி

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பூஜ்ஜியத்திற்கு மூன்று என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக தோல்வியை தழுவிய நிலையில், தற்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணுக்கு சென்று இந்திய அணி எதிர்கொள்ள இருக்கின்றது.

இந்த தொடரில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக சொல்ல முடியும். இதனால் இந்த தொடர் மிகவும் இந்திய அணிக்கு நெருக்கடி வாழ்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ind vs aus virat kohli rohit sharma r ashwin


அது மட்டுமல்லாமல் இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருந்தது. ஆனால் அதையும் ரத்து செய்து விட்டது. இந்த சூழலில் இந்திய அணியின் நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி விமர்சித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி ரகசியமாக பயிற்சி செய்கிறார்கள்.

இதில் என்ன ரகசியம் வேண்டியது இருக்கின்றது? நீங்கள் எப்போதும் போல் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க போகிறீர்கள். அப்படி இருக்கும்போது எதற்கு இந்த ரகசியம்? பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். காரணம் எந்த வீரரும் காயமடைந்து விடக்கூடாது என்று கூறினார்கள். ஆனால் பயிற்சி செய்யும் போதே தற்போது இரண்டு வீரர்களுக்கு காயம் அடைந்து விட்டது.

ஆஸ்திரேலிய போன்ற தொடருக்கு முன்பு ஒவ்வொரு அணியும் சிறப்பாக தயாராகும். ஆனால் அதனை இந்திய அணி தற்போது மிஸ் செய்து விட்டது என்று நினைக்கின்றேன். ஆஸ்திரேலியாவுக்கு 12 நாட்களுக்கு முன்பு சென்றாலும் சரி, 12 மாதங்களுக்கு முன்பு சென்றாலும் சரி. இந்த மாதிரி எந்த ஒரு தொடருக்கும் பயிற்சி எடுக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவில் நீங்கள் நிறைய பயிற்சி ஆட்டங்களில் விளையாடினால் மட்டுமே அந்நாட்டு வீரர்களின் பந்துவீச்சை உங்களால் எதிர்கொள்ள முடியும்.

அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது மிகவும் அபாயகரமானது. அதுவும் இல்லாமல் இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிராக முழுமையாக தொடரை இழந்து இருக்கின்றது. இதனால் இந்திய அணி வீரர்களின் நம்பிக்கை உத்வேகம் அனைத்தும் குறைந்து இருக்கும். இந்திய அணி நிர்வாகமும் தற்போது சரியாக செயல்படவில்லை. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாசித் அலி கூறியிருக்கிறார்.

Story first published: Monday, November 18, 2024, 16:17 [IST]
Other articles published on Nov 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+