Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓபனிங் இறங்கப் போவது யார்? பயத்துடன் காத்திருந்த ரசிகர்கள்.. சர்ப்ரைஸ் தந்த கோலி!

Recommended Video

Kohli announced that same team will play in 3rd ODI | ஓபனிங் யார்? சர்ப்ரைஸ் கொடுத்த கோலி

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் துவக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள்? என்ற கேள்வி போட்டி துவங்கும் முன் வரை நீடித்தது.

ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த நிலையில், அவர்கள் அணியில் இடம் பெறுவார்களா? என ரசிகர்கள் பயத்துடன் காத்திருந்தனர்.

ஒருநாள் தொடர்

ஒருநாள் தொடர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன. அதனால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் நிலை இருந்தது.

வெற்றி கடினம்

வெற்றி கடினம்

அதனால், இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் ஆடினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெறுவது கடினம் என்று கருதப்பட்டது.

ரசிகர்கள் பதற்றம்

ரசிகர்கள் பதற்றம்

அதனால் தான் ரசிகர்கள், முக்கியமான இந்தப் போட்டியில் துவக்க வீரர்கள் ரோஹித் - தவான், இருவருமே ஆடுகிறார்களா? என்பதை அறிய பதற்றத்துடன் காத்திருந்தனர். அதற்கு ஒரு காரணமும் உள்ளது.

அந்தக் கேள்வி

அந்தக் கேள்வி

அவர்கள் இருவரும் ஆடாவிட்டால், வேறு யாரை கேப்டன் கோலி துவக்க வீரராக களமிறக்குவார் என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் டாஸ் போடும் போது ஆச்சரியம் அளித்தார் கேப்டன் கோலி.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய அதே அணி இந்தப் போட்டியிலும் களமிறங்குவதாக கோலி தெரிவித்தார். இந்தியா முழு பலத்துடன் களமிறங்குவதை அறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

பேட்டிங் தேர்வு

பேட்டிங் தேர்வு

போட்டி நடைபெறும் பெங்களூரு ஆடுகளம் சேஸிங் செய்ய கடினமான ஆடுகளம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சேஸிங்

சேஸிங்

இந்திய அணி கடுமையான சேஸிங் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது. தவான், ரோஹித், கோலி, ராகுல் என நான்கு பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் நல்ல பார்மில் உள்ளனர்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே ஆகியோர் கை கொடுத்தால் இந்திய அணி நிச்சயம் இந்தப் போட்டியில் வெற்றி பெறும். பந்துவீச்சில் இந்தியா பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் ஆகிய ஐவரை மட்டுமே கொண்டுள்ளது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், மனிஷ் பாண்டே, ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, பும்ரா

Story first published: Sunday, January 19, 2020, 13:45 [IST]
Other articles published on Jan 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+