இனி 6 வாரங்களுக்கு ஆட முடியாது.. வலியில் துடித்த ஜடேஜா.. வேகமாக விரைந்த கார்.. ஷாக்கிங் சம்பவம்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் காயம் அடைந்த நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்தர் ஜடேஜா 6 வாரங்களுக்கு இனி கிரிக்கெட் ஆட முடியாது என்று கூறப்படுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 220 ரன்கள் எடுத்துள்ளது.

எப்படி
இந்திய அணிக்கு எதிராக மிகவும் வலுவான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா சென்று கொண்டு இருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இன்னிங்சில் இந்திய அணியின் ஆல் ரவுண்டனர் ஜடேஜா காயம் அடைந்தார். இவரின் கையில் காயம் ஏற்பட்டது.

காயம்
பேட்டிங் செய்யும் போது பந்து பட்டதில் இவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக சில நிமிடம் இவர் ஓய்வு எடுத்தார். இதனால் உணவு இடைவேளையின் போது ஜடேஜா பவுலிங் பயிற்சி செய்து கொண்டு இருந்தார். இதனால் ஜடேஜா மீண்டும் களத்திற்கு வருவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் என்ன
ஆனால் இவருக்கு நேரம் செல்ல செல்ல வலி அதிகம் ஆனது. இந்த வலி காரணமாக அவர் துடிதுடித்து போனார். இதையடுத்து ஜடேஜாவை வேகமாக காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது.

ஸ்கேன்
இந்த ஸ்கேனில் ஜடேஜாவிற்கு எலும்பில் விலகல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இன்னும் 6 வாரங்களுக்கு ஆட முடியாது என்று இதனால் அறிவிக்கப்பட்டது. ஜடேஜா தனது கையை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட்
மூன்றாவது டெஸ்டில் மீதம் உள்ள போட்டியில் ஜடேஜா இனி ஆட மாட்டார். இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இனி ஜடேஜா ஆடுவார். அதுவரை பெங்களூரில் இவர் சிகிச்சை பெறுவார்.


Click it and Unblock the Notifications