Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா வீசியதிலேயே மோசமான பந்து.. ஆனால் இதுக்கு பேர் தான் லக்? அடக்க முடியாத சிரிப்பு.. என்ன ஆச்சு?

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா வீசியதிலே மோசமான பந்தில் உஸ்மான் கவஜா ஆட்டம் இழந்த சம்பவம், பும்ராவையே கலகலவென சிரிக்க வைத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி 60 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் கவாஜா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.

ind vs aus jasprit bumrah sam konstas boxing day test vs

இந்த டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. குறிப்பாக கோன்ஸ்டாஸ் பும்ராவின் பந்தில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தார்.இந்த நிலையில் மோசமான பந்து ஒன்றில் அவருக்கு விக்கெட் கிடைத்ததால் அதனை நம்ப முடியாமல் பும்ரா கலகலவென சிரித்தார்.

ஆட்டத்தின் 44.1வது ஓவரின் பும்ரா வீசிய ஷார்ட் பந்தை கவாஜா அடித்தார். பேட்டில் நடுப்பகுதியில் மட்டும் அந்த பந்து பட்டு இருந்தால் அது நிச்சயம் பவுண்டரி அல்லது சிக்ஸராக சென்று இருக்கும். ஆனால் கவாஜாவை பேட்டின் கீழ் பகுதியில் அந்த பந்து பட்டது. இதனால் மிட்விக்கெட்டில் பில்டிங்கில் நின்று கொண்டிருந்த கே எல் ராகுகளிடம் அது கேட்ச் ஆனது.

இதனை கொஞ்சம் கூட நம்ப முடியாமல் பும்ரா கலகலவென சிரித்தார். ஏனென்றால் பும்ரா எந்த ஒரு யுக்தியும் பயன்படுத்தாமல் சாதாரணமாக ஷார்ட் பாலாக வீசினார். இது அவர் வீசியதிலே மோசமான ஒரு பந்தாகும். இது நிச்சயம் ரன்களை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் கவஜாவின் துரதிர்ஷ்டவசமாக தான் அது கேட்ச் ஆனது.

இதனால் தான் பும்ரா சிரித்து இருக்கிறார். எனினும் இது போன்ற அதிர்ஷ்டம் அவ்வப்போது இந்திய அணிக்கு கிடைத்தால் மட்டுமே இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடியும். மெல்போர்ன் முதல் நாள் ஆடுகளம் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா 300 ரன்களில் சுருட்டினால் மட்டுமே இந்திய அணிகளால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து இந்தியாவை சுருட்டி விடும்.

Story first published: Thursday, December 26, 2024, 9:56 [IST]
Other articles published on Dec 26, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+