Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

52.4 ஓவர்கள்.. நீயெல்லாம் மனுஷனே கிடையாது.. மெல்போர்ன் டெஸ்டில் அதிக ஓவர்களை வீசிய பும்ரா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 52.4 ஓவர்களை வீசியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் 4வது நாளில் மட்டும் பும்ரா 24 ஓவர்களை வீசியுள்ளதால், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 4வது நாளில் இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4வது நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை குவித்துள்ளது.

ind vs aus jasprit bumrah sam konstas

ஏற்கனவே 105 ரன்கள் முன்னிலையுடன் இருப்பதால், அந்த அணியின் ஸ்கோர் 333 ரன்களாக இருக்கிறது. 4வது நாளில் ஆஸ்திரேலியா அணியை விரைவாக ஆல் அவுட் செய்ய வாய்ப்பு கிடைத்த போது, இந்திய அணி அந்த சான்ஸை மிஸ் செய்தது. கடைசியில் களமிறங்கிய போலண்ட் - லயன் இருவரும் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளில் 270 ரன்களுக்கு மேல் எந்த இலக்கும் சேஸ் செய்யப்பட்ட வரலாறே இல்லை. இருந்தாலும் காபா மைதானத்தில் ஒரே நாளில் 324 ரன்களை இந்திய அணி விளாசி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. அதுபோல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய எழுச்சியை பெறுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

இதனிடையே பும்ராவின் செயல்பாடுகளை இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளாக சச்சின்,தோனி, விராட் கோலி என்று பேட்ஸ்மேன்களை மட்டுமே ரசிகர்கள் நம்பி இருந்தனர். ஆனால் முதல்முறையாக பும்ரா இருக்கிறார் என்று ஒரு பவுலர் மீது இந்திய ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

அதேபோல் 4வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மொத்தமாக 24 ஓவர்களை வீசி 56 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். முதல் இன்னிங்ஸில் 28.4 ஓவர்களை வீசிய பும்ரா 99 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தமாக இதுவரை 52.4 ஓவர்களை வீசி இருக்கிறார்.

அதேபோல் இந்தப் போட்டியில் 17 ஸ்பெல்லை பும்ரா வீசி இருக்கிறார். ஒரு நாளில் வேகப்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வரை வீசுவதே அரிதான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. மிட்சல் ஸ்டார்க் போன்ற வீரரே 20 ஓவர்களை வரை மட்டுமே வீசுவார். ஆனால் பும்ரா இந்திய அணிக்காக 24 ஓவர்களை வீசி மிரள வைத்துள்ளார். இதனால் பும்ரா ஒரு தலைமுறைக்கான வீரர் என்ற ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Sunday, December 29, 2024, 18:04 [IST]
Other articles published on Dec 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+