Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. வீரர்களின் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் பும்ரா.. BCCI-யின் முட்டாள்தனமான முடிவு அது- மதன் லால்

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.இந்த நிலையில் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பிருப்பதால் பும்ரா துணை கேப்டனாக விளையாடுகிறார்.

இதுகுறித்து மைக்கேல் இணையதளத்திற்கு பிரத்தேக பேட்டி அளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன்லால், பும்ரா கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களுக்கு தனது பந்து வீச்சு மூலம் நரகத்தை கொடுத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

ind vs aus india vs australia test match rohit sharma vs

இது குறித்து பேசிய அவர், பும்ராவின் பந்துவீச்சு பார்ப்பதற்கு நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பும்ரா ஒவ்வொரு முறையும் பந்து வீசும் போது அடுத்த பந்து எப்படி இருக்கும் என்று பேட்ஸ்மேன்களால் யூகிக்கவே முடியாது. பும்ரா கொஞ்ச தூரம் தான் ஓடி வந்து பந்தை வீசுகிறார். அவருடைய ஒவ்வொரு பந்துவீச்சும் பலவிதம் இருக்கின்றது.

அது பேட்ஸ்மேனின் வாழ்க்கையை நரகமாகிறது. பும்ரா உலகத்தரம் வாய்ந்த வீரராக விளங்குகிறார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதற்கு அனைத்து புகழும் பும்ராவின் பயிற்சிக்கு தான் உரியதாகும். பும்ராவால் பவுன்சர் பந்து வீச முடியும். திடீரென்று பந்து ஸ்டெம்புக்குள் வரும் வகையிலும் வீச முடியும்.

ஸ்டெம்பை விட்டு வெளியே செல்லும் வகையிலும் பந்து வீச முடியும். யாக்கர் வகை பந்தையும் வீச முடியும். இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் வாழ்க்கை நரகமாக தான் ஆக போகிறது. பும்ராவைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு பேட்ஸ்மேன் 7,000 ரன்கள் அடித்தாலும் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ள மாட்டார்.

எந்த ஒரு பேட்ஸ்மேனையும், அவர் விட்டு வைக்க மாட்டார். என்னுடைய காலத்தில் எல்லாம் வேகபந்துவீச்சாளர்கள் ஏழு முதல் எட்டு ஓவர்கள் வீசுவார்கள். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்கள் வீச தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த முறையை மாற்றி வேகப்பந்துவீச்சாளர்களை வளர்த்த தோனிக்கும், விராட் கோலிக்கும் தான் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

அவர்களால் தான் தற்போது நாம் பல மாற்றங்களை காண முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்ததை முட்டாள் தனமாக நினைக்கின்றேன். நம்மிடம் வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது நல்ல ஒரு விக்கெட்டை நாம் தயாரித்திருக்க வேண்டும் என்று மதன்லால் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 4, 2024, 18:09 [IST]
Other articles published on Dec 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+