Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனிதான் ஆட்டம்.. ஜான்சன் சாதனையை முறியடிப்பாரா? ஆஸ்திரேலியா மண்ணில் பும்ராவுக்கு கிடைத்த வாய்ப்பு!

சிட்னி: 21ஆம் நூற்றாண்டில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பு ஜஸ்பிரிட் பும்ராவுக்கு கிடைத்துள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியில் இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மிட்சல் ஜான்சனின் சாதனையை பும்ராவால் எளிதாக முறியடிக்க முடியும்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருக்கிறது.

ind vs aus jasprit bumrah sam konstas vs

கடைசி நேரத்தில் கான்ஸ்டஸ் உடனான மோதல் காரணமாக டென்ஷனான பும்ரா, அதே வேகத்தில் கவாஜாவின் விக்கெட்டை தட்டி தூக்கி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கி இருப்பதால், பும்ரா உடனடியாக நிதானமாகவும் சூழலை கையாண்டார். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் பும்ராவின் முழுமையான திறமை வெளிப்படும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா மண்ணில் புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பு இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு அமைந்துள்ளது. இதுவரை 9 இன்னிங்ஸில் ஆடியுள்ள ஜஸ்பிரிட் பும்ரா 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரும் சேர்ந்து செய்த பணியை இந்திய அணிக்காக பும்ரா தனியாளாக செய்திருக்கிறார்.

சிட்னி டெஸ்ட் போட்டியில் இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலே, இந்திய ஜாம்பவான் பிஎஸ் சந்திரசேகரின் சாதனையை பும்ராவால் சமன் செய்ய முடியும். 1972-73ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் 35 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது பிஎஸ் சந்திரசேகர் தான்.

கிட்டத்தட்ட 53 ஆண்டுகளுக்கு பின் பிஎஸ் சந்திரசேகரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு பும்ராவுக்கு கிடைத்துள்ளது. பிஎஸ் சந்திரசேகருக்கு பின் மன்கட் 34 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், கபில் தேவ் மற்றும் அஸ்வின் ஆகிய மூவரும் தலா 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சாதனையை பும்ரா எளிதாக முறியடிப்பார் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை உள்ளது.

ஆனால் 21ஆம் நூற்றாண்டில் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை ஆஸ்திரேலியா ஜாம்பவான் மிட்சல் ஜான்சனின் கைகளில் உள்ளது. 2013-14 ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரில் மிட்சல் ஜான்சன் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்த சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.

சிட்னி டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் பவுலிங் செய்யும் வாய்ப்பு பும்ராவுக்கு இருப்பதால், மிட்சல் ஜான்சனின் சாதனையை பும்ரா முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை முறியடிக்கும் பட்சத்தில் இந்த நூற்றாண்டின் சிறந்த பவுலர்களில் ஒருவராக பும்ரா அடையாளப்படுத்தப்படுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, January 3, 2025, 18:15 [IST]
Other articles published on Jan 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+