Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு ஒவ்வொரு மைதானம் முன்பும் சிலை வைக்கனும்.. தனி ஆளாக இந்திய அணியை சுமக்கிறார்!

பிரிஸ்பேன் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இமாலய ரன்களை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் நட்சத்திர வீரர் பும்ரா அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 5 போட்டியில் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சூழலில் இந்திய அணியின் பௌலிங் கொஞ்சம் கூட எடுபடவில்லை. ஆனால் பும்ரா மட்டும் தனியாக நின்று ஆஸ்திரேலியா அணிக்கு கடும் சவால்களை கொடுத்து வருகிறார்.

ind vs aus jasprit bumrah india vs australia gabba test vs

இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மொத்தமாகவே 17 விக்கெட்டுகளை தனியாளாக வீழ்த்தி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பார்ட்னர்ட்ஷிப் அமைத்து அபாரமாக விளையாடி வந்தனர். இருவரும் சதம் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் அடுத்தடுத்து பும்ரா அபாரமாக பந்துவீசி வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 327 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் எடுத்து தடுமாறியது. எனினும் தவிர மற்ற வீரர்கள் யாரும் ஆஸ்திரேலியாவுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படுத்தவில்லை. இதற்கு இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி புகழ்ந்து இருக்கிறார்கள். பிசிசிஐ, விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோரை தான் பாராட்டி ஊக்குவிப்பதாகவும் ஆனால் உண்மையான ஹீரோ தான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் இன்னொரு தரப்பினர் ஒட்டுமொத்த இந்திய அணியின் பந்து வீச்சையும் பும்ரா தனது தோளில் சுமந்து கொண்டு செல்வதாகவும் இதனால் பும்ராவுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் மைதானத்திற்கு முன்பும் சிலை வைத்து கௌரவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பும்ரா மட்டும் இல்லை என்றால் இந்திய அணி பழைய நிலையில் இருந்திருக்கும் என்றும் அவர் மட்டும்தான் தனி ஆளாக நின்று போராடுகிறார் என ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். பும்ரா இல்லை என்றால் இந்திய அணியின் நிலையில் நினைத்து கூட பார்க்க பயமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, December 15, 2024, 13:45 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+