மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் இளம் வீரர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார். உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான பும்ரா முதலில் பந்து வீசியபோது 19 வயது வீரரான சாம் கோன்ஸ்டாஸ் அபாரமாக விளையாடினார்.
குறிப்பாக பும்ரா ஓவரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையும் அவர் பெற்றார். அதுமட்டுமல்லாமல் பும்ராவின் ஒரே ஓவரில் 18 ரண்களை ஷாம் கோன்ஸ்டாஸ் வீழ்த்தினார். அத்துடன் அவர் நிறுத்திக் கொள்ளாமல் பும்ரா மீண்டும் பந்து வீச வருவார் என நம்புகிறேன் என்று கிண்டலும் செய்தார்.

இது போன்று இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்யும்போது பார்வையாளர்களை பார்த்து நன்றாக கத்துங்கள் கத்துங்கள் என சைகை காட்டினார். இது இந்திய ரசிகர்களை வெறுப்படைய செய்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இன்று களமிறங்கியது. 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா தடுமாறியது.
குறிப்பாக பும்ரா அபாரமாக பந்து வீசி கோன்ஸ்டாஸ் விக்கெட்டை எட்டு ரன்களில் வீழ்த்தினார். இதை அடுத்து பும்ராவும் ரசிகர்களை பார்த்து கத்துங்கள் என கூறி பதிலடி கொடுத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி, நீங்கள் செய்யும் ஒரு விஷயம் எப்போதுமே உங்களை பழி தீர்க்க திரும்பி வரும்.
தற்போது நிச்சயமாக கோன்ஸ்டாஸ் ட்ரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து கொண்டு நான் பும்ராவின் ஓவரில் இரண்டாவது இன்னிங்சிலும் அடித்து ஆடி இருக்க வேண்டும் என நினைத்திருப்பார்.இது போன்ற சம்பவங்கள் தான் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியை மேலும் விறுவிறுப்பாக மாற்றுகிறது என்று ஹஸி கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக், பும்ர்ச்ச் பந்துவீசி விக்கெட் எடுக்கும் போது இதுபோல் எல்லாம் செய்ய மாட்டார்.ஆனால் கோன்ஸ்டாஸ் அவுட் ஆனவுடன் நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்காக பம்ரா அப்படி செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.