Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா செய்த சம்பவம்.. ஆஸ்திரேலியா காலி.. ஒரே ஆண்டில் நினைத்து பார்க்க முடியாத ரெக்கார்டை படைத்தார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா நம்ப முடியாத செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணியை 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கினார். முன்னதாக முதல் இன்னிங்ஸில் அவர் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

இந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் அவர் இதுவரை 24 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பவுலிங் சராசரி 14.66 மட்டுமே. ஸ்டிரைக் ரேட் 32.7 ஆகும். இது மட்டுமின்றி 2024 ஆம் ஆண்டில் பும்ரா 13 போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் சராசரி 14.92 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 30.1 ஆகும்.

ind vs aus jasprit bumrah year ender 2024 vs

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஒரே பந்துவீச்சாளரால் 50க்கும் மேற்பட்ட விக்கெட்கள் 107 முறை வீழ்த்தப்பட்டு உள்ளது. அதில் பும்ராவின் இந்த செயல்பாடு உச்சத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு அவர் 71 விக்கெட்களை வீழ்த்தி இருக்கும் நிலையில் அவரது பவுலிங் சராசரியான 14.92 என்பது மூன்றாவது சிறந்த சராசரியாக உள்ளது. அதேபோல அவரது ஸ்ட்ரைக் ரேட் ஆன 30.1 என்பது இரண்டாவது மிகச் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆக உள்ளது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே. மேலும், பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் மட்டும் பும்ரா 30 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பந்துவீச்சாளர் 17 விக்கெட்கள மட்டுமே வீழ்த்தி இருக்கும் நிலையில், பும்ரா மாபெரும் சாதனையை செய்து இருக்கிறார்.

மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் நான்காவது முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தும் சாதனையை செய்தார்.
மேலும், மெல்போர்ன் போட்டியில் பும்ரா இதுவரை இல்லாத அளவு அதிக ஓவர்களை வீசினார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 28.4 ஓவர்களை வீசிய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் 24.4 ஓவர்களை வீசினார். ஒட்டுமொத்தமாக 53 ஓவர்களுக்கும் அதிகமாக பந்து வீசினார். இந்திய அணியிலேயே இந்தப் போட்டியில் அதிக ஓவர்களை வீசியதும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தான் விக்கெட்கள் அதிகமாக கிடைக்கின்றன என்பதால் அவரை இந்திய அணி அதிகமாக பயன்படுத்தியது. அதனால் பும்ராவுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

Story first published: Monday, December 30, 2024, 6:50 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+