Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்ஸ்மேன்களை குறை கூறிய ஹேசல்வுட்.. அடுத்த நாளே நீக்கம்! ஆஸ்திரேலியாவிலும் அரசியலா? கவாஸ்கர் தாக்கு

அடிலெய்ட் : இந்தியா,ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஹேசல்வுட் காயம் காரணமாக விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு காரணமாக தான் ஹேசல்வுட் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பதாக கவாஸ்கர் குற்றச்சாட்டி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ind vs aus india vs australia test match rohit sharma

இதனால் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். பல முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஹேசல்வுட் ஊடகத்தில் பேசும் போது பேட்ஸ்மேன்களை குறை கூறி இருந்தார். பேட்ஸ்மேன்கள் டாப் பாடலில் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஹேசல்வுட்டின் இந்த பேட்டிக்கு சில நாட்கள் கழித்து அவர் அதிரடியாக இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தொடரிலிருந்து கூட அவர் நீக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் ஹேசல்வுட்டுக்கு பந்து வீசும் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. செய்தியாளர்களை சந்திக்கும் போது கூட அவர் நன்றாகத்தான் இருந்தார்.

இது பெரும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு நடக்கும் விஷயம் தான். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இப்போதுதான் நான் பார்க்கிறேன் என்று கவாஸ்கர் கூறியிருந்தார். கவாஸ்கரின் இந்த கருத்து மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியைல் தழுவியது. அதிலிருந்து ஆஸ்திரேலிய அணிக்குள் பல புகைச்சல் ஏற்பட்டு இருந்தது. பல வீரர்கள் வெளிப்படையாகவே சில வீரர்கள் மீது குறை கூறி வந்தனர். இதனால் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Story first published: Thursday, December 5, 2024, 9:05 [IST]
Other articles published on Dec 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+