Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களை மன்னிச்சிடுங்க ஐயா! தனி ஆளாக போராடும் கேஎல் ராகுல்.. நடப்பு தொடரில் 2வது அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்த இந்திய அணியும் பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில் கே.எல் ராகுல் மட்டும் தனியாளாக நின்று அரைசதம் அடித்து அணியை காப்பாற்ற போராடி வருகிறார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது.

ind vs aus kl rahul india vs australia rohit sharma

இதனால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலியாவும் தோல்வியை தவிர்க்க இந்திய அணியும் போராடி வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது ஏதேனும் ஒரு வீரரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது.

ஒரு காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் பலமாகவும், பந்துவீச்சு மோசமாகவும் இருக்கும். ஆனால் தற்போது பந்துவீச்சில் பும்ரா மட்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்து வருகிறார். கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக பேட்டிங் மட்டமான நிலையில் இருக்கின்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் 445 ரன்கள் குவித்து இருக்கிறது.

இதனால் பாலோ ஆனை தவிர்க்க குறைந்தபட்சம் 245 ரன்கள் ஆவது கடக்க வேண்டும் . ஆனால் இந்திய அணியில் முன்வரிசை வீரர்களான ஜெய்ஸ்வால், விராட் கோலி, கில், பண்ட் ஆகியோர் ஆட்டம் இழந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 10 ரன்களில் வெளியேறினார்.

இந்த நிலையில் தனியாளாக களத்தில் நின்று கே எல் ராகுல் போராடி வருகிறார். 33 ரன்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த கே எல் ராகுல் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் நெருக்கடியை சமாளித்து வருகிறார். இதன் மூலம் ராகுல் அரைசதம் கடந்து 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது.

ராகுல் சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றுவாரா என்பது தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கேஎல் ராகுல் நியூசிலாந்து தொடரில் சொதப்பிய போது அவரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். தற்போது அதே ராகுல் தான் இந்திய அணியை காப்பாற்றுகிறார். இதனால் ரசிகர்கள் ராகுலுக்கு மன்னிப்பு கேட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, December 17, 2024, 6:52 [IST]
Other articles published on Dec 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+