சிட்னி : இயல்பான அதிரடி ஆட்டத்தை துவக்கம் முதலே வெளிப்படுத்தி தனது முதல் சதத்தை அட்டகாசமாக பதிவு செய்தார் டெஸ்டில். இவருடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை துவக்கிய புகழ் பெற்ற ஓப்பனிங் வீரர், இவர் ஆடிய ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்து பார்த்ததோடு அல்லாமல் வியந்து மனமார பாராட்டினார்.
இந்த தமிழக வீரர் வெளுத்து வாங்கினார் ஆஸ்திரேலிய பவுலர்கள் வீசிய
பந்துகளை நாலா புறமும் செலுத்தி அசத்தினார்.பவுண்டரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்த வண்ணம் இருந்தன , இவரது பேட்டில் இருந்து.
இந்த டெஸ்டில் மொத்தம் 1100 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டன.

ஒரே ஒரு சிக்ஸர் அடித்ததும் இந்த ஓப்பனிங் வீரர் மட்டுமே.
அவர் தான் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த். எல்லாவகை ஷாட்டுகளையும் நேர்த்தியாகவும், தைரியத்துடனும் அடித்து ஆடினார்.இவர் இந்த டெஸ்டில் 97 பந்துகளில் 152 நிமிடங்கள் விளையாடி சதம் எடுத்தார்.
இவருடன் ஜோடியாக ஆடிய சுனில் கவாஸ்கர் 162 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து இருந்த பொழுது ஸ்ரீகாந்தின் ஸ்கோர் 112 ரன்கள் 114 பந்துகளில்.
ஸ்ரீகாந்த் அவுட் ஆகும் பொழுது அணியின் ஸ்கோர் 191 ரன்கள்.
அவர் எடுத்தது 116 (117 பந்துகள். 19 x 4 & 1 x 6)
இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க வலிமையான அடித்தளம் அமைத்தார் ஸ்ரீகாந்த் என்றால் மிகையாகாது.இந்த டெஸ்ட் 1986 ஜனவரியில் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த டெஸ்டில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் ( 116 )
கவாஸ்கர் ( 172 )
மொஹிந்தர் அமர்நாத் ( 138 )
டேவிட் பூன் ( 131 )
8 ரன்கள் வித்தியாசத்தில் சதத்தை தவற விட்டவர் ஜியோப் மார்ஷ் ( 92 )
இந்திய அணி ஸ்கோர்
600 / 4 டிக்ளர்
ஆஸ்திரேலிய அணி
ஸ்கோர்
396
பாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் 119 / 6
விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய பவுலர்கள்
ஷிவ்லால் யாதவ் 8
ரவி சாஸ்திரி 6
பவுலிங்கில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தவர்கள்
கில்பார்ட் 135
ரே பிரைட் 121
ஹாலண்ட் 113
மாத்தியுஸ் 95
ரவி சாஸ்திரி 101
ஷிவ்லால் யாதவ் 99
ஸ்ரீகாந்தை தவிர வேறு யாரும் வெகு வேகமாகவும் , அதிரடியாகவும் ஆடவில்லை.பின் வரும் வீரர்கள் ஸ்கோர் மற்றும் எடுத்துக் கொண்ட பந்துகள் நிலைமையை விளக்கும்.
சுனில் கவாஸ்கர் 172 (400)
ஸ்ரீகாந்த் 116 ( 117 )
மொஹிந்தர் அமர்நாத் 138 ( 312 )
டேவிட் பூன் 131 ( 311 )
ஜியோப் மார்ஷ் 92 ( 304 )
ஆலன் பார்டர் 71 ( 172 )
மாத்தியு ஸ் 40 (105 )
டேவிட் பூன் 25 (72 )
ஜியோப் மார்ஷ் 28 ( 84 )
க்ரெக் ரிட்சி 17* ( 157 )
ஸ்ரீகாந்தின் சராசரி 99.14 ஸ்ரீ காந்த் மாதிரியே 19 பவுண்டரிகள் எடுத்த சுனில் கவாஸ்கரின் இந்த மேட்ச் சராசரி ரன்கள் 43.சதம் எடுத்து அசத்திய ஸ்ரீகாந்த் இரண்டு கேட்சுகள் பிடித்தார்.இரண்டு இன்னிங்சிலும் இவர் கேட்ச் பிடித்தது எதிரணி வீரர் வேனே பில்லிப்ஸ் அடித்த பந்துகளைதான்.
டிராவில் முடிவடைந்தது இந்த டெஸ்ட். ஆட்ட நாயகர் ஸ்ரீகாந்த்.
வாசுதேவன், பெங்களூரு