Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை பார்த்து கற்று கொள்ளுங்கள்! இதை செய்தால் மட்டுமே ரன் அடிக்க முடியும்..கோலிக்கு ஹைடன் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடப்பு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் தனது ஃபார்மை மீட்டெடுப்பது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் ஆலோசனை வழங்கியுள்ளார். பெர்த் டெஸ்டில் சதம் அடித்ததன பிறகு கோலி மீண்டும் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் தான் 2004-ம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின் டெண்டுல்கர் கடைப்பிடித்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஹைடன் கோலியை அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஐந்து இன்னிங்ஸ்களில் 5, 100 நாட் அவுட், 7, 11 மற்றும் 3 ரன்கள் அடித்துள்ளார் - சராசரியாக 31.50.

இந்த சூழலில் 2004-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது டெண்டுல்கர் சந்தித்த தொடர்ச்சியான தோல்விகளின் போது கடைப்பிடித்த அணுகுமுறையை குறிப்பிட்டுள்ளார். டெண்டுல்கர் தனது பிரபலமான ஆஃப்-சைடு ட்ரைவ்களை 10 மணி நேரத்திற்கும் மேலாக தவிர்த்து, தன்னை நிதானப்படுத்தி காட்டினார். இந்த மாற்றம் அவருக்கு வேகப்பந்து மற்றும் ஸ்பின் பந்துகளை சமாளிப்பதிலும் கவனம் செலுத்த உதவியது மற்றும் அவருடைய ஃபார்மில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தியது.

மெல்போர்ன் டெஸ்டில் கோலி டெண்டுல்கரின் அணுகுமுறையை பின்பற்ற முடியும் என்று ஹேடன் நம்பிக்கை வைத்துள்ளார். கோலி தன்னை மாற்றிக்கொள்ளும் மனப்பான்மையையும் தன்னடக்கத்தையும் கொண்டிருக்கிறார் என்று அவர் கருதுகிறார். சச்சின் எப்படி டிரைவ் ஆட மாட்டேன் என்று செய்து காட்டினாரோ, விராட் கோலிக்கும் அந்த மனப்பான்மை உள்ளது," என்று ஹைடன் குறிப்பிட்டு, கோலியின் ஃபார்மை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

டெஸ்ட் போடடியின் போது கோலி கூடுதல் நேரம் கிரீஸில் நிற்க வேண்டும் என்று ஹேடன் அறிவுறுத்தினார். மெல்போர்ன் ஆடுகளத்தில் நல்ல பேட்டிங் திறனை வெளிப்படுத்தினால், ரன்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஹைடன், நிதானம் மற்றும் ஒழுக்கம் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

கோலி சிறந்த கவர் ட்ரைவ் ஆடுவதில் வல்லவராக இருந்தாலும், ஆனால் அதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கோலி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே புல் பந்துகளை விளையாடுவதை தடுத்து கொள்ள வேண்டும் என்றும் ஹைடன் வலியுறுத்தினார் . டெண்டுல்கர் தனது தவறுகளை சரிசெய்து இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினார் என்று ஹைடன் பகிர்ந்து கொண்டார். கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன்களை சேர்த்தால் தான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியும் என்றும் ஹைடன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 24, 2024, 20:07 [IST]
Other articles published on Dec 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+