Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா தான் முக்கியம்.. டீமை விட்டு தூக்கி எறியப்பட்ட அந்த வீரர்.. ரஹானே எடுத்த முடிவு!

சிட்னி : சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மாவை களமிறக்க உள்ளது.

இதற்காக இந்திய அணியில் இருந்து துவக்க வீரர் மயங்க் அகர்வால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் விராட் கோலி மீது எதற்காக விமர்சனம் வைக்கப்படுமோ, அதே விஷயத்தை தான் தற்காலிக கேப்டன் அஜின்க்யா ரஹானேவும் செய்துள்ளார்.

விராட் கோலி

விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து அணியை மாற்றிக் கொண்டே இருப்பதும், இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்காமல், சில போட்டிகளில் மோசமாக ஆடினாலே அணியை விட்டு நீக்குவதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வந்தது.

ரோஹித் வருகை

ரோஹித் வருகை

இந்த நிலையில், தற்காலிக கேப்டன் ரஹானே, மூத்த வீரர் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிய நிலையில், யாரை ஆட வைப்பது, யாரை நீக்குவது என்ற குழப்பத்துக்கு ஆளானார். அப்போது தான் மயங்க் அகர்வால் சிக்கினார். அவரது மோசமான ஆட்டம், ரோஹித் சர்மாவுக்கு வழி விட்டது.

மயங்க் அகர்வால் பார்ம்

மயங்க் அகர்வால் பார்ம்

கடந்த காலங்களில் சிறப்பாக ஆடி வந்த மயங்க் அகர்வால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் 20 ரன்களை ஒரு முறை கூட தாண்டவில்லை. எனினும், இரண்டு போட்டிகளில் மட்டுமே மோசமாக ஆடி இருந்ததால் அவருக்கு இன்னும் சில போட்டிகள் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் கவாஸ்கர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் கூறி இருந்தனர்.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருந்தார். அவருக்கு பதில் ரோஹித் சர்மாவை ஆட வைக்கக் கூடும் எனவும் சிலர் எதிர்பார்த்தனர். ஆனால், மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, January 6, 2021, 15:26 [IST]
Other articles published on Jan 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+