இந்திய அணியை மதிக்கிறேன்.. அதுக்காக எல்லாம் சும்மா போக முடியாது! அஸ்வினை கூட எடுக்கல- நாதன் லயான்
மும்பை : இந்திய அணி வீரர்களை மதிப்பதாகவும் அதற்காக எங்களால் சும்மா போக முடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நாதன் லயான் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயான், முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் இடம்பெறாதது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணிகள் திறமை வாய்ந்த பல கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள்.
இதனால் 530 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினும் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஜடேஜாவும் இடம்பெற முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் எவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிவதாக லயான் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இந்திய அணியில் பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் இருக்கிறார்கள்.
பும்ரா, விராட் கோலி போன்ற தலைசிறந்த வீரர்களாக உள்ளனர். அது மட்டும் இல்லாமல் மேலும் சில வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். இந்திய அணி மிகவும் பலமாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக போட்டியிடுவது என்பதை கடினமான விஷயம். நாங்கள் இந்திய அணியில் வெறும் ஒரு வீரர் மீது மட்டும் கவனம் செலுத்தி விளையாடவில்லை.
நாங்கள் இந்திய அணியை மதிக்கிறோம். அதற்காக அவர்களிடம் சண்டையிட மாட்டோம் என்றெல்லாம் இல்லை. எங்களுடைய இயல்பான ஆக்ரோஷமான கிரிக்கெட்டை எப்போதுமே விளையாடுவோம். களத்தில் கடும் போட்டியை இந்திய அணிக்கு எதிராக நாங்கள் தருவோம். நாங்கள் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறோம்.
எனவே முதல் போட்டியில் முடிவு எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை. எனினும் இந்திய அணி வீரர்கள் என்னுடைய பந்துவீச்சில் பவுண்டரிகள் அடித்தாலும், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. அவர்கள் அதிரடியாக ஆடுவதை நான் விக்கெட் எடுக்கும் வாய்ப்பாக தான் நான் பார்க்கிறேன் என்று நாதன் லயான் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 4, 2024, 22:02 [IST]
Other articles published on Dec 4, 2024


Click it and Unblock the Notifications