Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம ஆளுங்க கொண்டாடியே ஒரு வீரரை அழிச்சிடுவாங்க! காலை வாரிய நிதிஷ் ரெட்டி.. தோனியை ஃபாலோ செய்யுங்க!

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி முதல் இன்னிங்ஸில் தனி ஆளாக போராடி அபார சதம் அடித்தார். இதன்மூலம் பாலோ ஆனிலிருந்து இந்திய அணி தப்பித்தது. இந்த சூழலில் இரண்டாவது இன்னிங்ஸில் முக்கிய கட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சியது.

முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிவிட்டு இரண்டாவது இன்னிங்ஸில் நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன்னில் வெளியேறி இருப்பது ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. முதலில் நீங்கள் நிதீஷ்குமார் ரெட்டி சதம் அடித்த பிறகு அவரை பேட்டிங் வரிசையில் முன்பே களமிறக்கி வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

ind vs aus virat kohli rohit sharma melbourne vs


இது குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி, நிதிஷ்குமார் அபாரமாக விளையாடுவதால் அவருக்கு பேட்டிங்கில் ப்ரோமோஷன் கொடுங்கள் என்றும் கூறியிருந்தார். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் நிதிஷ் குமார் ரெட்டி அபாரமாக விளையாடி அணியை டிரா செய்ய முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் லயன் பந்தில் ஒரு ரன்னில் திரும்பினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த வீரர் இரண்டாவது இன்னிங்ஸில் காலை வாரினால், நாம் யாரை தான் நம்புவது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். நிதிஷ் குமார் செய்தது மிகப்பெரிய சாதனை என்பது கொஞ்சமும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

ஆனால் நிதிஷ் குமார் சதம் அடித்ததை ஒட்டுமொத்த நாடுமே கொண்டாடி, ஏதோ அணி வெற்றி பெற்றுவிட்டது என்பது போல் ஒரு இமேஜை உருவாக்கி விட்டோம். அதாவது ஒரு விஷயம் எப்போதாவது தான் நடைபெறும் என்று நாம் நமக்குள்ளே நினைத்துக் கொண்டு அது நடந்தால் கொண்டாடி மகிழ்வதற்கும், இப்போது நடந்தது சாதாரணமான விஷயம் தான். அது தொடர்ந்து நடக்கும் என்று குறைவான அளவில் சந்தோஷம் அடைவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

இதுதான் நிதிஷ்குமார் ரெட்டியின் விஷயத்தில் நடந்திருக்கிறது. சச்சின் டெண்டுல்கர் சதம் அடிக்கும் போதெல்லாம் பெரிய அளவில் கத்தி குதிக்க மாட்டார். அவரை சார்ந்தவர்களும் அதனை பெரிய அளவில் கொண்டாட மாட்டார்கள். ஏனென்றால் இந்த சதம் இத்துடன் நிற்கப் போவதில்லை. இவர் மீண்டும் அடிப்பார் என்ற மைண்ட் செட் தான் காரணம். நிதிஷ்குமாரும் தன்னுடைய சதத்தை அவ்வாறு தான் பார்த்திருக்க வேண்டும்.

ஆனால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய, இந்திய ஊடகமும் நிதிஷ் குமார் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டு செய்த செயலும் இது எப்போதாவது நடக்கும் அதிசியம் என்று மைண்ட் செட்டை உருவாக்கி விட்டது. இதனால் தான் நாம் தான் முதலில் சதம் அடித்து விட்டோமே என கூடுதல் தைரியம் இரண்டாவது இன்னிங்ஸில் அவருடைய தோல்விக்கு ஒரு காரணமாக இருந்திருக்கும்.

நிதிஷ்குமார் மட்டுமல்லாமல் சஃபராஸ் காணும் இதே தவறை தான் செய்தார். டான் பிராட்மேன் போல் சர்பராஸ் கானை ரசிகர்கள் ஒப்பிட்டு பேசினார்கள். சப்ராஸ்கானுக்கு வாய்ப்பு கிடைத்ததை அவருடைய குடும்பத்தினர் வெகுவாக கொண்டாடினார்கள். இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த சதமும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு சப்ராஸ்கான் பெரிய ஸ்கோர் அடிக்காமல் தற்போது பெவிலியனில் உட்கார்ந்து பெஞ்சு தேய்த்து கொண்டிருக்கின்றார்.

இந்த விஷயத்தில் தான் தோனியின் ஸ்டைலை பாலோ செய்ய வேண்டும். பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றாலும், சதம் அடித்தாலோ இல்லை அரை சதம் அடித்தாலோ தோனி அதனை பெரிய அளவில் கொண்டாட மாட்டார். ஏனென்றால் அவ்வாறு செய்தால் இது எப்போதாவது தான் நடக்கும் என்று நமது ஆழ்மனது நம்மையே அறியாமல் நம்பிவிடும்.

இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. இது எப்போதும் நடக்கும் என்று ஆழ் மனதையும், உள்ளுணர்வையும் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் கட்டமைக்க வேண்டும். அப்போதுதான் ஒரு சதம் அடித்தால் போதும் என்ற மனநிறைவு ஏற்படாது. இந்த தவறை நிதிஷ் குமார் ரெட்டி மாற்றிக்கொண்டு தமக்கு கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் அவர் சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே கபில்தேவ், தோனி போன்ற லெவலுக்கு வர முடியும்.

Story first published: Monday, December 30, 2024, 18:23 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+