Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா கிட்ட வச்சிக்காதீங்க.. தலையை கொடுத்து மாட்டிக்க கூடாது.. கான்ஸ்டஸை அமைதி காக்க சொன்ன பாண்டிங்

சிட்னி: ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேரடியாக மோதக் கூடாத ஒரு வீரர் யார் என்றால் அது பும்ரா மட்டும் தான் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் ஓய்வறையில் இருப்பவர்கள் கான்ஸ்டஸ் உடன் பேசியிருப்பார்கள் என்று நம்புவதாக கூறிய பாண்டிங், தேவையில்லாமல் எந்த வீரருடன் மோதக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவுடன் நேரடியாக ஆஸ்திரேலியா அணியின் 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டஸ் மோதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த நாட்டின் ஜாம்பவான்கள் ரசிக்கப்படவில்லை. உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் வீரருடன் நேரடியாக மோதி, அவரை மேலும் வலிமையாக்கிவிட்டதாக கான்ஸ்டஸ் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ind vs aus jasprit bumrah sam konstas

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் மார்க் வாஹ் அட்வைஸ் கூறியிருந்த நிலையில், தற்போது ரிக்கி பாண்டிங் சில அறிவுறுத்தல்களையும் வழங்கி இருக்கிறார். அதில், கிரிக்கெட் போட்டியின் போது இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பிடிக்காத விஷயம். ஏனென்றால் ஒரு கட்டத்தில் நாம் செய்யும் விஷயங்கள், நம்மை நோக்கி பின் தொடர்ந்து பிரச்சனை கொடுக்கும்.

ஆஸ்திரேலியா அணியின் இரு வீரர்களும் எவ்வளவு முடியுமோ, அத்தனை செய்து நேரத்தை கடத்த முயற்சித்தனர். ஆனால் இறுதியில் விக்கெட்டை பறிகொடுத்ததே மிச்சம். ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நேரடியாக மோதக் கூடாது ஒரு வீரர் யாரென்றால், அது ஜஸ்பிரிட் பும்ரா தான். அவர் பவுலிங் ஃபார்மில் உச்சத்தில் இருக்கிறார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் கவாஜா 5 முறை பும்ராவின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.

ind vs aus jasprit bumrah sam konstas

இதுபோன்ற ஒரு சூழலில் கான்ஸ்டஸ் அந்த நேரத்தில் தலையிட வேண்டிய தேவையில்லை. அது அவரின் சண்டையும் கூட அல்ல.. அது கவாஜாவுக்கும், பும்ராவுக்கும் இடையிலானது. அவர் இளம் வீரராக இருப்பதால், ஆஸ்திரேலியா அணியின் ஓய்வறையில் இருப்பவர்கள் நிச்சயம் கான்ஸ்டஸ் உடன் பேசுவார்கள் என்று நம்புகிறேன்.

ஏனென்றால் கான்ஸ்டஸ் அந்த பிரச்சனையில் தலையிடாமல் இருந்திருக்க முடியும். கடைசி 2 பந்துகளையும் சீனியர் வீரரை எதிர்கொள்ள விட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் டாம் மூடி தனது எக்ஸ் பக்கத்தில், சாம் கான்ஸ்டஸ் கற்றுக் கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளது. அவரின் மன உறுதியையும், இளம் வீரருக்கான உற்சாகத்தை பாதிக்காத வகையில் ஓய்வறையில் சில விஷயங்களை சொல்லுவார்கள் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார்.

Story first published: Saturday, January 4, 2025, 10:22 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+