Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 பேட்ஸ்மேன்கள்தான் ஆடுவார்கள்.. அவசர அவசரமாக திரும்பிய பண்ட்.. இந்தியா எடுக்கும் அந்த ரிஸ்க்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாதியில் வெளியேறிய பண்ட் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைவது வழக்கமாகி உள்ளது. முக்கியமான வீரர்கள் எல்லோரும் இந்த தொடரில் வரிசையாக காயம் அடைந்து வருகிறார்கள்.

மூன்றாவது டெஸ்டில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டிற்கு ஆஸ்திரேலியா 281 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் பண்ட் பாதியில் வெளியேறினார். ஆட்டத்தின் பாதியில் பண்ட் காயம் காரணமாக வெளியேறினார்.

காயம்

காயம்

இவரின் கையில் காயம் ஏற்பட்டு பெவிலியன் திரும்பினார். இவருக்கு பெரிய காயம் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. இதனால் உடனே பண்ட் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவருக்கு அவசரமாக ஸ்கேன் எடுக்கப்பட்டது.

ஸ்கேன்

ஸ்கேன்

இவருக்கு பெரிய காயம் இருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இவருக்கு செய்யப்பட்ட ஸ்கேனில் பெரிய அளவில் காயம் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது பண்ட் பாதுகாப்பு கருதி ஓய்வு எடுத்து வருகிறார்.

சாகா

சாகா

இதற்காக தற்போது விர்த்திமன் சாகா தற்போது கீப்பிங் வருகிறார். அதே சமயம் பாதியில் வெளியேறிய பண்ட் இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஜடேஜா இல்லாத நிலையில் 10 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

சிக்கல்

சிக்கல்

ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அதிலும் 10 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆடுவார்கள் என்பதால் இந்திய அணி கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.

Story first published: Sunday, January 10, 2021, 10:15 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+