Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போன மேட்சிலேயே இந்தியாவின் கதையை முடிச்சி இருப்போம்.. இப்போது வென்று விட்டோம்.. ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் வரும் ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ind vs aus pat cummins rohit sharma melbourne vs

இது குறித்து போட்டிக்கு பிறகு பேசிய அவர், இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டியாக அமைந்தது. நான் விளையாடியதில்லை ஒரு சிறந்த போட்டி இதுவாகும். ஏனென்றால் இந்த வாரம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவு மிகவும் அமோகமாக இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் தடுமாற்றத்தை சந்தித்தோம். அப்போது மார்னஸ் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.

நானும் வெற்றிக்கு என்னுடைய பங்களிப்பை கொடுத்திருப்பது சந்தோஷத்தை தருகிறது. இதேபோன்று முதல் இன்னிங்சில் இங்கு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் அபாரமாக விளையாடி எங்களை 400 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றுவிட்டார். இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயிக்க முயற்சி செய்தோம்.

ஏனென்றால் இந்திய அணியை வெற்றி அருகே செல்ல அனுமதிக்க கூடாது என்பதற்காக தான் நாங்கள் டிக்ளேர் செய்யாமல் தொடர்ந்து விளையாடினோம். அது மட்டும் இல்லாமல் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் போது நாம் நினைத்த மாதிரி பில்டர்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

அதனால் தான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நான் பேட்ஸ்மேன் அருகே அதிக பில்டர்களின் நிறுத்தினேன். எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அதேபோன்று எதிரணி பேட்ஸ்மேன்களுக்கும் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

எங்களால் பேட்டாலும், அணியின் வெற்றிக்கு பங்களிப்பு தர முடியும் என்பதை காட்டி விட்டோம். நாங்கள் ஓவர்ரேட்டில் பின் தங்கி இருந்தோம். இதனால்தான் டிராவிஸ் ஹெட் வைத்து பந்து வீசினோம். கடந்த டெஸ்ட் போட்டியிலே நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். ஆனால் வானிலை சூழ்நிலையால் போட்டி சமனில் முடிவடைந்தது. ஆனால் இன்று நாங்கள் வெற்றியை பெற்று விட்டோம். சிட்னி டெஸ்ட் போட்டியில் நல்ல மனநிலையுடன் செல்வோம் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Monday, December 30, 2024, 15:16 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+