Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு நாள் எங்க இருந்த தங்கம் நீ? ஆஸி. வீரர்களை ஓட விடும் பிரசித் கிருஷ்ணா.. செம பவுலிங்

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டு வருகிறார். இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சில் பும்ரா மட்டும்தான் அபாரமாக செயல்பட்டார்.

சிராஜ் நன்றாக பந்து வீசினாலும், சில சமயங்களில் அவருடைய ஓவர் எடுபடாமல் இருந்தது. இதனால் பும்ரா தனி ஆளாக இந்திய அணியின் பந்துவீச்சை தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு விளையாடினார்.

ind vs aus jasprit bumrah prasidh krishna virat kohli vs

இந்த நிலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது.இதனால் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் சிராஜும், பிரசித் கிருஷ்ணாவும் அபாரமாக பந்து வீசினார். சிராஜ் இன்று அபாரமாக செயல்பட்டு கோன்ஸ்டாஸ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தினார்.

எனினும் யாருமே எதிர்பாராத வகையில் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு இன்று அபாரமாக இருக்கிறது. ஆடுகளம் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி இருக்கிறது. கடும் வெப்பம் காரணமாக பந்து வீசுவது என்பது மிகவும் கடினமானதாகும். ஆனால் பிரசித் கிருஷ்ணா அபாரமாக செயல்பட்டு வந்தார்.

பிரசித் கிருஷ்ணா தன்னுடைய உயரத்தை பயன்படுத்திக்கொண்டு ஆடுகளத்தில் இருந்து பவுன்ஸ் செய்ய வைக்கிறார். இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சில் பந்து அதிக அளவு பவுன்ஸ் ஆகாது. ஆனால் பிரசித் கிருஷ்ணா இதற்கு கொஞ்சம் நேர்மாறான பவுலர் என்பதால் அவருடைய பந்தை கணிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டம் இழக்கின்றனர்.

மதிய உணவு நேர இடைவெளிக்கு முன்பு பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டம் இழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்ட் ஆனார். அலெக்ஸ் கேரி 21 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழக்க வைத்தார். கடந்த போட்டியில் எல்லாம் அலக்ஸ் கேரி முக்கிய கட்டத்தில் ரன்கள் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்து வீசி வருவதால் இந்த தங்கத்தை ஏன் இவ்வளவு நாளாக இந்த டெஸ்ட் தொடரில் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Story first published: Saturday, January 4, 2025, 9:12 [IST]
Other articles published on Jan 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+