உடைந்து போய்விட்டார்.. சிராஜ், பும்ராவை பார்த்து சொன்னது என்ன? ஆஸி. இனிவெறி தாக்குதல்.. ஷாக் பின்னணி
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோர் இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன் பீப் சர்ச்சை, கொரோனா விதிமீறல் சர்ச்சை என்று இந்திய வீரர்கள் சர்ச்சையில் சிக்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய வீரர்கள் ஜடேஜா, பண்ட் இருவரும் காயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

எப்படி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் பும்ரா, சிராஜ் ஆகியோர் இன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யும் போது இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

என்னாச்சு
பும்ரா, சிராஜ் ஆகிய இரண்டு பேரும் பீல்டிங் நிற்கும் போது அருகில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் "குரங்கு'' என்றது கூறி இந்திய வீரர்களை விமர்சனம் செய்துள்ளனர். குரங்கு, குரங்கு என்று மீண்டும் மீண்டும் சொல்லி இந்திய வீரர்களை விமர்சனம் செய்துள்ளனர்.

பும்ரா
இதை கேட்டு கோவம் அடைந்த பும்ரா உடனே.. இந்திய அணி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து இந்திய அணி நிர்வாகிகள் பவுண்டரி எல்லை கோட்டிற்கு அருகே வந்து நின்றுள்ளனர். ஆனால் இந்திய அணி நிர்வாகிகள் வந்த பின்பும் கூட ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி தாக்குதல் தொடங்கி உள்ளது.

தாக்குதல்
இவர்கள் இருவரை மட்டுமின்றி சைனியை பார்த்தும் ஆஸ்திரேலிய வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர். ரோஹித் சர்மாவின் தோற்றத்தையும் விமர்சனம் செய்துள்ளனர். இந்திய வீரர்களை முழுக்க முழுக்க இன ரீதியாக ஆஸ்திரேலிய வீரர்கள் அழுத்தி உள்ளனர்.

சிக்கல்
இதில் பும்ரா, சிராஜ் இருவரும் மனம் புண்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆஸியில் இந்திய வீரர்கள் நடத்தப்படும் விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications