Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS- யாராலும் மறக்க முடியாத பார்டர் கவாஸ்கர் டெஸ்ட்! டிராவாக இருந்த போட்டியை வென்ற இந்திய அணி

அடிலெய்ட் : பார்டர் கவாஸ்கர் தொடரில் யாராலும் மறக்க முடியாத டெஸ்ட் என்றால், அது இது தான். முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது இந்த டெஸ்டில்.தொடர்ந்து ஆடிய இந்திய அணியும் சளைக்காமல் ஆடி அவர்களும் 500 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

இரண்டு அணிகளின் முதல் இன்னிங்ஸ்கள் முடிவதற்குள் டெஸ்ட் நான்காம் நாளை அடைந்து விட்டது.முதல் இன்னிங்சில் 33 ரன்கள் முன்னிலையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.இரண்டு அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மன்கள் இரட்டை சதங்கள் எடுத்தனர்.

ind vs aus rohit sharma india vs australia gabba test vs

போதிய நேரம் இல்லாத காரணத்தால் இரண்டு அணிகளும் முடிவு டிராவில் இருக்கும் என்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பவுலர்களால் மொத்தம் எடுக்கப்பட்ட விக்கெடுக்கள்

அஜித் அகார்கர் 8
அனில் கும்ப்ள 6

ஆண்டி பிட்ச்ல் 5

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெரும்பாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வி வி எஸ் லட்சுமன் தனது முத்திரையை பதிவு செய்தார் , இந்த டெஸ்டிலும் சதம் எடுத்து. 148 ரன்கள் 18 பவுண்டரிகள் உதவியுடன்.

2003 ம் ஆண்டு அடிலேய்ட் மைதானத்தில் நடைப் பெற்றது இந்த இரண்டாவது டெஸ்ட்.நான்காம் நாள் ஆரம்பத்தில் தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி அன்றைய தினம் முடிவில் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கி ஆடிக் கொண்டு இருந்தது.

இதற்கு இடையில் அன்றைய தினம் ஆஸ்திரேலிய அணியின்
இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, இந்திய பவுலர்களால், குறிப்பாக அஜித்
அகார்கரின் திறமை மிக்க பந்து வீச்சால்.
6 - 41

முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த
ஆஸ்திரேலிய அணி இரண்டாவது
இன்னிங்சில்
ஆல் அவுட் 196 ரன்கள்.

230 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி தங்கள் கடைசி இன்னிங்ஸ் துவக்கியது.கடைசி நாள் ஆட்ட. முடிவில் எந்த வகை ரிசல்ட்டும் எதிர் பார்க்கப் பட்டது.ஆட்டத்தில் விரு விருப்புக் கூடியது.

விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தன.
முன்னதாக முதல் இன்னிங்சில் ரிக்கி பாண்டிங் இரட்டை சதம் எடுத்தார். 242 ரன்கள் ( 31 X 4 )

ராகுல் டிராவிட்,
வி வி எஸ் லட்சுமன் ஜோடி 305 ரன்கள் சேர்த்தனர்.

ராகுல் ட்ராவிட் 233
(23 X 4 & 1 X 6 )

இந்திய அணி ஸ்கோர் 523

இரண்டாவது இன்னிங்சில் லட்சுமன் எடுத்தது 32 ரன்கள்.
ராகுல் ட்ராவிட் இந்த இன்னிங்சிலும் நின்று ஆடி 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் மாபெரும் வெற்றி பெற பெரிதும் உதவினார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் 233 / 6

ஆட்ட நாயகர் ராகுல் டிராவிட்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Friday, December 20, 2024, 17:07 [IST]
Other articles published on Dec 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+