Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: கிழட்டு நாய்கள்.. விராட் கோலி, ரோகித் சர்மாவை தரம் தாழ்ந்து விமர்சித்த ரவி சாஸ்திரி

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி எப்போதுமே வீரர்களை பாராட்டுகிறேன் என்ற பெயரில் தவறான எடுத்துக்காட்டுடன் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் தோனியை ஒரு முறை பாராட்டுகிறேன் என்ற பெயரில் அவர் ஸ்டெம்பிங் செய்யும் வேகத்தை பிக்பாக்கெட் உடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பாராட்டுகிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு முகத்திற்கு நேராகவே ஒரு தவறான வார்த்தையை பயன்படுத்தி இருப்பது சமூக வலைத்தளத்தின் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அனைவரும் 237 ரன்கள் என்ற இலக்கை இந்தியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை 38.3 ஓவர்களில் எட்டியது.

Ravi shastri on RoKo

இதில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 121 ரன்கள் எடுக்க விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார். இது குறித்து இரு வீரர்களையும் அழைத்து நேர்காணலில் ரவி சாஸ்திரி ஈடுபட்டார். அப்போது வயதான கிழட்டு நாய்கள் இரண்டுக்கும் இன்னும் துடிப்பு மட்டும் வாலில் போகவில்லையே? அது எப்படி என்று கேள்வி கேட்டார்.

ரவி சாஸ்திரியில் இந்த பேச்சு இது பாராட்டா இல்லை அவமதித்து பேசுகிறாரா என புரியாமல் ரோகித் சர்மா அதிர்ச்சி அடைந்தார். எனினும் ஒரு பொய் சிரிப்புடன் சமாளித்துக் கொண்ட ரோகித் சர்மா, ஆம் எங்களுடைய கிரிக்கெட்டை நாங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றோம்.

அதைவிட மிகவும் முக்கியம் நாங்கள் எவ்வளவு பாராட்டுகளை பெற்றாலும், எவ்வளவு சாதித்தாலும் எப்போதெல்லாம் வாய்ப்புகள் நாட்டுக்காக விளையாட கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு புதிய தொடக்கத்தை அணுகுவது போல் நாங்கள் ஒவ்வொரு போட்டியையும் விளையாடுவோம்.

அப்படித்தான் பெர்த் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியை அனுகினோம். கடந்த 15, 17 ஆண்டுகளாக நாங்கள் என்ன செய்தோம் என்பதை மறந்து விட்டு ஒரு புது வீரர் போல் இந்த தொடரை நாங்கள் அனுகினோம். இப்படித்தான் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் அணுகவோம். விராட் கோலியும் அதேதான் செய்வார். எனினும் நாங்கள் இருவரும் இந்த மூன்று போட்டிகளையும் என்ஜாய் செய்தோம் என்று ரோகித் சர்மா கூறினார். ரவி சாஸ்திரியின் இந்த பேச்சு ரசிகர்களை கோபம் அடைய செய்திருக்கிறது. ரவி சாஸ்திரி போதையில் இவ்வாறு பேசுகிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Saturday, October 25, 2025, 17:35 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+