Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி இதான் லாஸ்ட் சான்ஸ்.. இல்லைனா நேரா வீட்டுக்கு தான்.. இளம் வீரருக்கு செக் வைத்த சீனியர்!

சிட்னி : இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பை பெற கடைசி வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராக உள்ளனர்.

ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் இந்திய லெவன் அணி பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளது. இது ரிஷப் பண்ட்டுக்கு கிட்டத்தட்ட கடைசி வாய்ப்பாகும்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 17 அன்று துவங்க உள்ளது. தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கு பெறாத பிற டெஸ்ட் அணி வீரர்கள் பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளனர்.

வீரர்கள்

வீரர்கள்

அஜின்க்யா ரஹானே தலைமையில் இந்திய லெவன் அணி, ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் மோத உள்ளது. இந்தப் போட்டியில் அஸ்வின், புஜாரா, ஹனுமா விஹாரி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், விரிதிமான் சாஹா, ரிஷப் பண்ட் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ரிஷப் பண்ட் நிலை

ரிஷப் பண்ட் நிலை

இதில் ரிஷப் பண்ட் நிலை தான் கேள்விக்குறியாக உள்ளது. அவர் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டார். டெஸ்ட் அணியிலும் முதன்மை விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு மாற்று வீரராக மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

எடை சிக்கல்

எடை சிக்கல்

அவர் உடல் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி அவரை நீக்கி இருந்தது தேர்வுக் குழு. இதை தாண்டி அவர் டெஸ்ட் அணியில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால் இந்த பயிற்சிப் போட்டியில் அவர் சிறப்பாக ஆட வேண்டும்.

இரண்டு பயிற்சிப் போட்டிகள்

இரண்டு பயிற்சிப் போட்டிகள்

இந்திய வீரர்கள் இரண்டு பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளனர். இரண்டாவது பயிற்சிப் போட்டியில் தற்போது டி20 அணியில் ஆட உள்ள வீரர்கள் பங்கேற்பார்கள். சாஹா நல்ல பார்மில் இருக்கிறார், காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பதால் அவருக்கும் பயிற்சி அளிக்கும் நோக்கில் இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படும்.

எத்தனை வாய்ப்பு கிடைக்கும்?

எத்தனை வாய்ப்பு கிடைக்கும்?

ஆனால், ரிஷப் பண்ட்டுக்கு இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் பேட்டிங் செய்ய, விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, அவர் முதல் பயிற்சிப் போட்டியிலேயே தன் முத்திரையை பதிக்கும் வகையில் பெரிய இன்னிங்க்ஸ் ஆடினால் மட்டுமே டெஸ்ட் அணி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

காத்திருக்கும் சாஹா

காத்திருக்கும் சாஹா

சாஹாவை இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும், ரிஷப் பண்ட்டை வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் என இந்திய அணியில் ஒரு நடைமுறை இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அந்த நிலை மாறும், சாஹா முழு தொடரிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு இடம்?

யாருக்கு இடம்?

சாஹா ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்தார். இதை அடுத்து அவருக்கே டெஸ்ட் அணியில் முக்கியத்துவம் கிடைக்கும். பயிற்சிப் போட்டியில் ரிஷப் பண்ட் சதம் அடிக்கும் பட்சத்தில் அணியில் சாஹாவை முந்தி இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

Story first published: Saturday, December 5, 2020, 18:23 [IST]
Other articles published on Dec 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+