Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் அடிச்ச அடி.. வங்கதேசத்திடம் கெஞ்சிய ஆஸ்திரேலிய கேப்டன்.. ஆணவத்தால் அழியும் மஞ்சள் பாய்ஸ்!

செயிண்ட் லூசியா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்று சூளுரை மேற்கொண்டு களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணி தற்போது தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

சூப்பர் 8 சுற்று பிரிவில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Ind vs aus

இதனை அடுத்து ரோகித் சர்மா களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவை சுக்கு நூறாக உடைத்தார். விராட் கோலி விக்கெட்டை எடுத்து விட்டோம் என்ற மகிழ்ச்சியிலிருந்து ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு ரோகித் சர்மா அவுட் ஆப் சிலபஸ் கேள்வி போல் வந்து ஆஸ்திரேலியா பவுலர்களை திணறடித்தார்.

இதனால் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி வெளியேறிவிடும்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் நிச்சயமாக வங்கதேசத்திடம் உதவி கேட்பது போல் கமான் பங்களாதேஷ் என்று பதிவிட்டு இருக்கிறார். அதாவது ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தினால் ஆஸ்திரேலியா அரையிறுதி சுற்றுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் ரஜினியின் குடும்பத்தை கொல்ல வரும்போது ரஜினி வைத்த ஆப்பால் சாப்பிட்டு நாள் நாளாச்சு காசு குடுங்கம்மா என்று யாசகம் கேட்பாரோ அதேபோல் தற்போது வங்கதேசத்திடம் வெற்றியை தாருங்கள் என்று ஆஸ்திரேலியா அணி தற்போது யாசகம் கேட்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு அனைத்தும் ரோகித் சர்மா அதிரடி ஆட்டம் தான் காரணம் என்றும் அவர்கள் கூறி வருகின்றார்.

Story first published: Tuesday, June 25, 2024, 2:00 [IST]
Other articles published on Jun 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+