For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இமாலய சாதனை.. சச்சின், கங்குலி ரெக்கார்டு காலி.. புதிய மைல்கல்லை எட்டிய ஹிட்மேன்!

Recommended Video

Rohit Sharma achieved 9,000 runs | இமாலய சாதனை.. புதிய மைல்கல்லை எட்டிய ஹிட்மேன்!

பெங்களூரு : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் புதிய மைல்கல் சாதனையை செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

மேலும், இந்த மைல்கல்லை எட்டிய விரைவாக எட்டிய வீரர்கள் வரிசையில் சச்சின், கங்குலி ஆகியோரை முந்தி இருக்கிறார்.

ஆஸி. பேட்டிங்

ஆஸி. பேட்டிங்

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 286 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் 131, லாபுஷாக்னே 54 ரன்கள் குவித்தனர்.

ரோஹித் பேட்டிங்

ரோஹித் பேட்டிங்

அடுத்து 287 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ராகுல் துவக்கம் அளித்தனர். ஷிகர் தவான் காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை.

ரோஹித் சதம்

ரோஹித் சதம்

ராகுல் 19 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதம் கடந்தார். அவருடன் விராட் கோலி அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார்.

9,000 ரன்கள் மைல்கல்

9,000 ரன்கள் மைல்கல்

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 4 ரன்கள் கடந்த போது ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். கடந்த ஆண்டு முதல் உச்சகட்ட பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, இந்த மைல்கல்லை எட்டியதில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

ஏழாவது வீரர்

ஏழாவது வீரர்

இந்திய வீரர்களில் 9,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடக்கும் ஏழாவது வீரர் ஆவார் ரோஹித் சர்மா. மேலும், இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் செய்தார்.

217 இன்னிங்க்ஸ்

217 இன்னிங்க்ஸ்

ரோஹித் சர்மா 217 இன்னிங்க்ஸில் 9,000 ரன்களை கடந்துள்ளார். விராட் கோலி 194 இன்னிங்க்ஸில் இந்த மைல்கல்லை எட்டி இந்திய அளவிலும், உலக அளவிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.

மற்ற இந்திய வீரர்கள்

மற்ற இந்திய வீரர்கள்

ரோஹித், கோலி தவிர்த்து, இந்த மைல்கல்லை எட்டிய மற்ற இந்திய வீரர்கள் - முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி ஆவர்.

மூன்றாம் இடம்

மூன்றாம் இடம்

மேலும், உலக அளவில் இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய வீரர்களில் ரோஹித் சர்மா (217 இன்னிங்க்ஸ்) மூன்றாம் இடம் பிடித்துள்ளார். விராட் கோலி (194 இன்னிங்க்ஸ்) முதல் இடத்திலும், ஏபி டிவில்லியர்ஸ் (208 இன்னிங்க்ஸ்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

சச்சின், கங்குலியை முந்தினார்

சச்சின், கங்குலியை முந்தினார்

இதே பட்டியலில் சச்சின், கங்குலி ஆகியோரை முந்தி இருக்கிறார் ரோஹித் சர்மா. கங்குலி 228 இன்னிங்க்ஸிலும், சச்சின் 235 இன்னிங்க்ஸிலும் 9,000 ரன்களை கடந்து உலக அளவில் நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

ரோஹித் சர்மா மூன்றாவது போட்டியில் 128 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இந்த சதம் 29வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். அவரது இந்த இன்னிங்க்ஸில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 19, 2020, 21:01 [IST]
Other articles published on Jan 19, 2020
English summary
IND vs AUS : Rohit Sharma achieved 9,000 runs milestone and beat Ganguly and Sachin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+