Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள்! கோலி, ரோகித் இதை சரி செய்தாலே போதும்.. அசாருதீன் கருத்து

ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்வதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் குற்றச்சாட்டி இருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி டிரா செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி செஷனில் ஏழு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தோல்வியை தழுவியது. இந்த நிலை ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் மூன்றாம் தேதி தொடங்குகிறது.

ind vs aus virat kohli rohit sharma melbourne

இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்திய அணியின் இந்த பின்னடைவு குறித்து நமது மைக்கேல் தளத்திற்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அதில் நமது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்கிறார்கள்.

இதனால் தான் நமது அணியால் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. நமது கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஃபார்மில் இல்லை. எனவே கடைசி டெஸ்ட் போட்டி அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. விராட் கோலியும் தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டம் இழந்து வருகிறார்.

ஸ்விங் பவுலிங்கை எதிர்கொள்ள அவர் கிரீஸ்க்கு வெளியே நிற்கிறார். அது தவறான விஷயமாகும். ஸ்விங் பந்துகளை சரியாக விளையாட வேண்டும் என்றால் நீங்கள் கிரீஸ்க்கு உள்ளே நின்று விளையாடுங்கள். இந்திய அணியில் ஜெய்ஸ்வால் நன்றாக பேட்டிங் செய்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் அவருடைய தனிப்பட்ட ஸ்கோர் மட்டும் போதாது.

ஒட்டுமொத்த பேட்டிங் வரிசையும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணிகள் வெற்றி பெற முடியும். இதேபோன்று சிட்னி டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக இடம் பெற வேண்டும். நிதிஷ் ரெட்டி சதம் அடித்ததால் மட்டுமே இந்திய அணி கடைசி வரை சமன் செய்வதற்காக போட்டியில் போராட முடிந்தது. இல்லையென்றால் ஆஸ்திரேலிய அணி எப்போதோ வெற்றி பெற்றிருக்கும். தங்களுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி விளையாடினால் மட்டுமே சிட்னி டெஸ்டில் இந்தியா வெற்றி பெற முடியும் என்று அசாருதீன் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 31, 2024, 10:20 [IST]
Other articles published on Dec 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+