Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS - போதும் கோலி, ரோகித்! ரொம்ப ஓடிட்டீங்க! வரிசையில் நிற்பவர்களுக்கு வாய்ப்பு தாங்க!

மெல்போர்ன் : ஓடிக்கொண்டே இருப்பதற்கும் ஓய்வு தேவை. இதற்கு கிரிக்கெட் விளையாட்டும் விதி விலக்கல்ல என்பதை இங்கே காணலாம்.வெகு வேகமாக வளர்ந்து வரும் கிரிக்கெட் விளையாட்டு தற்பொழுது சந்திக்கும் பிரச்சனை அதிக வீரர்கள் போட்டியாளர்களாக காட்சி அளிப்பது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுபவ வீரர்களுக்கு அளிக்கும் அழுத்தமும் அதிகரித்து வருகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அனுபவம் மிக்க வீரர்கள் ஆன முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்நாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் சமீபகால டெஸ்ட் ஆட்டங்களின் வெளிப் பாடுகள் , ஆடும் முறையில் தயக்கம், தன்னம்பிக்கை குறைவு, தொடர்ந்தார் போல் அதிக ரன்கள் குவிக்க முடியாத இயலாமை எல்லாம் சேர்த்து கவனிக்கும் பொழுது தெரிய வருகின்றது இருவருக்கும் பேட்டிங் ஆடுவதிலும், அதிக ரன்கள் குவிக்கவும் திணறுகிறார்கள் என்பது.

ind vs aus virat kohli rohit sharma melbourne vs

மேலும் இவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் நின்று, மேட்ச்சின் தன்மை தேவைக்கு ஏற்ப நிதானமாகவும், பொறுமையாகவும் ஆடி தனிப்பட்ட முறையில் ரன்கள் குவிப்பதுடன், அணியின் ரன்கள் அதிகரிக்கவும் ஈடுபட வேண்டும்.
உடன் ஆடும் ஜோடி வீரரை ஊக்குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.
ஆனால் சமீப காலமாக இருவரின் ஆட்டமும் சொல்லிக் கொள்கிறா மாதிரியில்லாதது வினோதமாக உள்ளது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் கிரிக்கெட்டின் தொன்று தொட்டு பல வகை ஷாட்டுக்களை அட்டகாசமாக ஆடி ரன்கள் எடுக்க முடியும் அதிக உழைப்பு இல்லாமல் ( hit established shots effortlessly).இன்றைய இளம் மற்றும் புதிய வீரர்கள் தைரியமாக பயன் படுத்தி ஆடி வேகமாகவும், அதிக ரன்கள் குவிப்பது போல அடிக்கடி இவர்கள் இருவராலும் விளையாட இயலவில்லை என்பதும் முக்கியமான காரணம்.

அந்த அழுத்தமும் இருவரின் சமீப கால ஆட்டங்களின் குறைவான ரன்களுக்கு காரணம்.டெஸ்ட் ஆட்டங்களில் தேவையான நிதானம், பொறுமை, நின்று சூழ்நிலைக்கு ஏற்ப ஆடுவது போன்ற முக்கிய அம்சங்கள் அதிக அளவில் ஒரு நாள் ஆட்டங்கள், டி 20, ஐ பி எல் போன்றவைகளில் ஈடுபடுத்திக் கொள்வதால், அத்தகைய வகை ஆட்டங்களின் முறைகளை பின்பற்றுவதின் தாக்கங்கள் பெரிதும் டெஸ்ட் விளையாடும் விதம், முறைகளை பாதித்து உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.

அனுபவம் மிக்க இருவரும் எதிர் வரும் டெஸ்டுகளில் பேட்டிங்கில் தொடர்ந்தார் போல் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி அதிகப்படியான ரன்கள் குவிக்காவிட்டால், இருவருக்கும் நேரம் வந்து விட்டது பிற வீரர்களுக்கு வழி விடுவதற்கு என்பது தெரிந்து விடும்.இருவரும் கிரிக்கெட் பிச்சில் ரன்கள் எடுக்க ஓடி களைத்து போய் விட்டனர் என்பதையும் அவர்கள் ஆடும் ஆட்டதின் திறமை குறைவையுமே எடுத்துக் காட்டும். இந்த அனுபவம் மிக்க இருவரும் அத்தகைய சூழ்நிலைக்கு அனுமதிக்க மாட்டார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Monday, December 30, 2024, 15:39 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+