Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித், கோலி மட்டும் என்ன வானத்திலிருந்து குதிச்சாங்களா? பிசிசிஐ இந்த ரூலை கொண்டு வரனும்!

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பும்ரா, ஜெய்ஸ்வால் கே எல் ராகுல் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டம் மட்டும்தான் இந்திய அணியின் மானத்தை இதுவரை காப்பாற்றி இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி மட்டும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து பெரிய ஸ்கோரை அடித்து இருந்தால் இந்திய அணி இந்நேரம் தொடரில் முன்னிலை பெற்று இருக்கும். ஆனால் விராட் கோரியின் ரோகித் சர்மாவும் தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கிறது.

ind vs aus virat kohli rohit sharma melbourne vs

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து தொடரில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா அதன் பிறகு தொடர்ந்து தடுமாறி வருகிறார். அவர் கடைசியாக அரைசதம் அடித்து 10 இன்னிங்ஸ்கள் ஆகிவிட்டது. நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் அவர் 20 ரன்கள் கூட ஒரு இன்னிங்ஸில் அடிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாகவே 30 ரன்கள் தான் அடித்திருக்கிறார். மறுபுறம் விராட் கோலி டெஸ்ட் போட்டிக்கு சதம் அடித்த பிறகு அவரும் ஒரே மாதிரி ஆன பந்து ஒரே மாதிரியான ஷாட்டை அடித்து ஆட்டம் இழந்து வருகிறார். இதனால் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் அணியை விட்டு சென்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் ரோகித் சர்மா திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்ம் அவுட் ஆனதுக்கு என்ன காரணம் என்பது குறித்து கவாஸ்கர் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அதில் டெஸ்ட் கிரிக்கெட் என்பது இருப்பதிலேயே மிகவும் கடுமையான போட்டியாகும். அதில் பேட்ஸ்மேன்கள் சிறந்து விளையாட வேண்டும் என்றால் தொடர்ந்து விளையாடி கொண்டு இருக்க வேண்டும்.

ஆனால் ரோகித் சர்மா பொறுத்தவரை இங்கிலாந்து எதிரான தொடருக்கு பிறகு அவர் எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வில்லை. இதனால் அணியின் சீனியர் வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய ஆட்டத்திறனை வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

கவாஸ்கர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையாகும். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட, தன்னுடைய கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டிகள் வரை ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினார். சச்சினே அப்படி இருக்கும் போது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ரஞ்சி கிரிக்கெட் பக்கமே செல்வதில்லை. இதில் பிசிசிஐ கூட் அவர்களுக்கு விதிவிலக்கை வழங்குகிறது.

இதனால் தான் விராட் கோலி ரோகித் சர்மா இருவருமே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகின்றனர். இதனால் இந்திய அணியை விட எந்த வீரரும் பெரியவர் கிடையாது என்பதால் இனி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு என்ற விதியை பி சி சி ஐ கொண்டுவர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ரோகித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என ஒற்றை காலில் நின்றால், அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லை என்றால் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓய்வு பெறுவது தான் அவர்களுக்கு நல்லது என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர் .

Story first published: Monday, December 30, 2024, 18:47 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+