டி20 உலக கோப்பை வென்று குரு தட்சணை தந்த ரோகித்.. சிறு வயதில் இருந்தே கேப்டன்! பயிற்சியாளர் கருத்து
மும்பை : டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா அதனை தமக்கு குரு தட்சணையாக வழங்க போவதாக கூறினார் என்று அவருடைய சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த தினேஷ் லாட் கிரிக்கெட்டில் திறமையுள்ள சிறுவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்குவதில் வல்லவர்.
இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவை அவர் 2000 ஆண்டு கண்டுபிடித்து அவருக்கு பயிற்சி வழங்கியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் தினேஷ் லாட், ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்ட போது எனக்கு ஆச்சரியமாகவே இல்லை.

ஏனென்றால் அவர் சிறு வயதிலிருந்து தாம் விளையாடிய அணிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். பள்ளி பருவத்திலும் அவர்தான் கேப்டன் அவர் பள்ளி பருவத்தில் கேப்டனாக இருந்தபோது நான் எந்த அறிகுறியும் கூற மாட்டேன். யாரை வைத்து பந்து வீசு வேண்டும் எப்படி விளையாட வேண்டும்.
என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ரோகித் சர்மாவுக்கு அனைத்தும் தெரியும். சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்துவார். சரியான பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தவார். ஒரு அணியை ஒருங்கிணைத்து நடத்துவதில் ரோகித் சர்மாவுக்கு அப்போது இருந்து ஆர்வம் அதிகம் ஒருங்கிணைந்து விளையாடினால் வெற்றி பெற முடியும் என்பது ரோகித் சர்மாவுக்கு தெரியும்.
50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நாம் தோல்வியை தழுவிய பிறகு ரோகித் சர்மாவிடம் நான் பேசினேன். அப்போது இந்திய அணியின் பேட்டிங் இறுதி போட்டிகள் சரியாக இல்லை என்பது குறித்து விவரித்தேன். ரோகித் சர்மா ஆட்டம் இழந்த விதம் தவறாக முடிந்து விட்டது. அவர் மட்டும் ஆட்டோமெலக்காமல் இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெற்று இருக்கும்.
ஏனென்றால் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார். அவர் அணிக்காக விளையாடினால் என்பதை அவருக்கு நான் புரிய வைத்தேன். இதனை அடுத்து ரோகித் சர்மா எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தார். டி20 உலக கோப்பையை வென்று அதனை உங்களுக்கு குரு தட்சணையாக வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். அதை மாதிரி டி20 உலக கோப்பையை ஜெயித்த பிறகு எனக்கு கால் செய்து உங்களுக்கு குரு தட்சணை வழங்க போகிறேன் என்று கூறினார் என தினேஷ் லாத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications