Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் பழைய இடத்துக்கே போங்க.. ரோஹித் இடத்துக்கு வேட்டு வைக்கும் அதிரடி திட்டம்.. பரபர ட்விஸ்ட்!

சிட்னி : ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் தன் முக்கியத்துவத்தை மீண்டும் இழக்கும் வகையில் அவரை மிடில் ஆர்டரில் ஆட வைக்கவும் இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுக்கக் கூடும் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மாவுக்கு சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என ரசிகர்கள் இடையே விவாதம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், அவரை அணியில் மிடில் ஆர்டரில் ஆட வைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

துவக்க வீரர்கள்

துவக்க வீரர்கள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஷுப்மன் கில் ஆடினர். கில் தன் அறிமுக போட்டியில் சிறப்பாக ஆடினார். மயங்க் அகர்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.

ஹனுமா விஹாரி நிலை

ஹனுமா விஹாரி நிலை

அதே போல, மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். எனவே, அவரை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்ற முடியாது

மாற்ற முடியாது

அதே சமயம், மயங்க் அகர்வால் - ஷுப்மன் கில் ஜோடியை பிரிப்பதில் இந்திய அணி நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. மயங்க் அகர்வால் இதற்கு முன் பல போட்டிகளில் சிறப்பாக ஆடி உள்ளார். ஷுப்மன் கில் தன் முதல் போட்டியிலேயே திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

எனவே, அவர்களை பிரிக்காமல் ரோஹித் சர்மாவை அணியில் ஆட வைக்க ஒரு திட்டம் வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம். ஹனுமா விஹாரியை நீக்கி விட்டு, ஆறாம் வரிசை பேட்ஸ்மேன் ஆக ரோஹித் சர்மாவை ஆட வைப்பதே அந்த திட்டம்.

பழைய இடம்

பழைய இடம்

ரோஹித் சர்மா நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் தான் ஆடி வந்தார். ஆனால், அது அவருக்கு ஏற்ற இடமாக இல்லை. துவக்க வீரராக அவர் கடந்த ஆண்டு பங்கேற்ற தொடரில் அடிரடியாக சதங்களை அடித்துக் குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த இடத்தை ஆஸ்திரேலிய தொடரில் அவர் மீண்டும் இழக்க நேரிடலாம்.

Story first published: Wednesday, December 30, 2020, 18:49 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+