Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களுக்கு தெரிந்த மொழி இதுதான்.. ஸ்மித் கண் முன்பே "ஷேடோ பேட்டிங்" செய்த ரோஹித்.. பக்கா பதிலடி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா ஷேடோ பேட்டிங் செய்த சம்பவம் பெரிய வைரலாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த வாரம் நடந்தது. டிராவில் முடிந்த போட்டியில் இந்திய வீரர் பண்ட் மைதானத்தில் போட்டு வைத்து இருந்த கார்டை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அழித்தார்.

யாருக்கும் தெரியாமல் பண்ட் வரைந்து வைத்து இருந்த கோட்டை ஸ்மித் அழித்தார். ஸ்மித்தின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

என்ன

என்ன

வீரர்கள் ஸ்டம்ப் லைனிற்கு நேராக தங்கள் வசதிக்கு ஏற்றபடி கார்ட் அமைத்து இருப்பார்கள். இப்படி பண்ட் வரைந்து வைத்து இருந்ததைதான் ஸ்மித் அழித்தார். இதன் காரணமாக ஸ்மித்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

ஸ்மித் வேண்டுமென்று செய்யவில்லை, அவர் ஷேடோ பேட்டிங் செய்தார். பேட்டிங் செய்து பார்ப்பது அவர் வழக்கம் என்று அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஸ்மித் வலது கை பேட்ஸ்மேன். அவர் ஏன் இடதுகை பேட்ஸ்மேன் போல ஷேடோ பேட்டிங் செய்து பார்க்கிறார் என்று கேள்விகள் எழுந்தது.

ரோஹித்

ரோஹித்

இந்த நிலையில் ரோஹித் சர்மா இதேபோல் செய்து இன்று ஸ்மித்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். ஸ்மித் போலவே இன்று ரோஹித் சர்மா ஷேடோ பேட்டிங் செய்தார். ஸ்மித் போல வலது கையில் பேட்டிங் செய்வது போல பாவனை காட்டி.. அவரின் கண்ணுக்கு எதிராக ரோஹித் சர்மா ஷேடோ பேட்டிங் செய்தார்.

ஓவருக்கு இடையில்

ஓவருக்கு இடையில்

ஓவருக்கு இடையில் ரோஹித் சர்மா இப்படி செய்தார். இதை அருகில் நின்று விரக்தியோடு ஸ்மித் முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். ரோஹித் சர்மாவின் இந்த செயல் ஸ்மித்திற்கு தரமான பதிலடியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்மித் போல ரோஹித் சர்மா மைதானத்தில் கார்டை அழிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 18, 2021, 9:46 [IST]
Other articles published on Jan 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+