Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்க கேப்டனே நான் தான்.. ஹர்சித் ராணாவுக்கு திட்டம் போட்டு கொடுத்த ரோஹித்.. அடுத்த பந்திலே விக்கெட்

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா சாதாரண ஒரு வீரராக இருந்து இளம்வீரர் ஹர்சித் ராணாவுக்கு திட்டம் போட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதன் மூலம் கேப்டனாக இல்லை என்றாலும் ரோகித் சர்மா அணிக்காக விளையாடுவதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

Rohit sharma Helps Harshit Rana

முதல் போட்டியில் ரோகித் சர்மா எட்டு ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் எடுத்தார். இதைப் போன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 121 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ரோகித் சர்மா வித்திட்டார். பேட்ஸ்மேனாக இந்த தொடரில் 202 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருதை அவர் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 198 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்திருந்தது கைவசம் 13 ஓவர்கள் இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஹர்ஷித் ராணா ஓவர் வீசிக்கொண்டு இருந்தார். அணியில் சாதாரண வீரராக இருந்த ரோகித் சர்மா, ஹர்ஷித் ராணாவை அழைத்து எப்படி பந்து வீசவேண்டும் என்று அட்வைஸ் வழங்கினார்.

பந்தை ஷார்ட் பாலாக பிட்ச் செய்து பேட்ஸ்மேனின் நெஞ்சை தாக்கும் வகையில் பந்தை வீசு என்று ஹர்ஷித் ராணாவுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கினார். அதன்படியே ஹர்சித்ரானா பந்து வீச மிச்செல் ஓவன் அந்த பந்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற அது ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடமே கேட்ச் ஆக மாறியது.

இதனை அடுத்து தான் சொன்ன விதத்தில் பந்து வீசி விக்கெட்டை எடுத்ததால் ரோகித் சர்மா ஹர்சித் ரானாவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. கேப்டனாக இல்லை என்றாலும் ரோகித் சர்மா அனிக்காக எந்த ஒரு ஈகோவும் இன்றி செயல்படுகிறார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Saturday, October 25, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+