Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் என்பதால் ரோகித் தப்பித்து வருகிறார்.. முன்னாள் ஆஸி வீரர் கருத்து.. பும்ராவுக்கு ஆதரவாக குரல்

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்படக்கூடாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் செயல்பாடு மிகவும் மோசமான வகையில் இருக்கிறது.

நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் மொத்தமாகவே அவர் ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 31 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரோகித் சர்மா மூன்று தொடர்களிலும் சேர்த்து 164 ரன்கள் அடித்திருக்கிறார்.

ind vs aus sydney test rohit sharma virat kohli vs

இது அவருடைய பேட்டிங் சராசரி 10 என்ற அளவில் இருக்கின்றது. இதனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் இது குறித்த கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ரோகித் சர்மாவின் கடைசி பத்து இன்னிங்ஸ் டெஸ்ட் ஸ்கோரை பார்த்தால் கவனிக்கும் வகையில் இருக்கின்றது. பல வீரர்கள் இது போல் ஒரு சரிவை கண்டிருக்கிறார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள்.

மற்ற சிலருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை ரோகித் சர்மாவிடமே விட்டுவிட வேண்டும். ஒரு கேப்டனாக அந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார். ஒரு அணியை வழிநடத்தும் போது கூடுதல் வாய்ப்பு கேப்டனுக்கு வழங்கப்படும். நிச்சயமாக ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஸ்கோர்கள் பெரிய அளவில் இல்லை. எனினும் சிட்னி டெஸ்ட் போட்டி அவருக்கு கடைசியாக இருக்காது என்று நினைக்கின்றேன்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து ரோகித் சர்மா என்ன முடிவை எடுத்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேலை கேப்டன் பதவியில் இருந்து போவாரா என்றும் சொல்ல முடியாது என்று கிளார்க் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், ரோகித் சர்மாவை விட பும்ராவின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக பாராட்டியுள்ளார். ரோகித் சர்மா ஒரு சிறந்த வீரர் என்றும் அவர் சார்பு திரும்புவார் என்றும் நாம் நம்புவதாக பிஞ்ச் கூறியுள்ளார்.

Story first published: Thursday, January 2, 2025, 7:41 [IST]
Other articles published on Jan 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+