Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா ஒன்றும் GOAT அல்ல.. இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தின் தவறு இது.. விளாசிய மஞ்ச்ரேக்கர்!

சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்ட சம்பவத்தை மறைத்து வைக்கும் அளவிற்கு அவர் ஒன்றும் GOAT வீரர் அல்ல என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் இதுதான் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா களமிறங்கியுள்ளார். இதனால் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டது உறுதியானது. டாஸின் போது பும்ரா பேசுகையில், எங்கள் கேப்டன் தாமாக முன் வந்து ஓய்வெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ind vs aus rohit sharma gautam gambhir

இதுதான் இந்திய அணியின் ஒற்றுமைக்கு சான்று. யாருக்கும் சுயநலமே கிடையாது. இந்திய அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ, அதனை செய்வோம் என்று கூறியிருந்தார். கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார் என்பதை மறுத்து, விலகியதாக மீண்டும் மீண்டும் அனைவரும் பேசி வந்தது நேற்றே விமர்சனங்களை எழுப்பியது.

இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஏன் ஏதோ சீக்ரெட் ஆபரேஷனை போல் மறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதுதான் இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் எனக்கு பிடிக்காத விஷயம். பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டதை மறைக்கும் அளவிற்கு ரோஹித் சர்மா ஒன்றும் ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன் அல்ல.

ஒருவேளை விராட் கோலிக்கு இப்படி செய்திருந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் ரோஹித் சர்மா சுமார் 60 டெஸ்ட் போட்டிகள் விளையாடி SENA நாடுகளில் ஒரேயொரு சதத்தை மட்டுமே விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி வெறும் 40 மட்டும் தான். இதனால் ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை இந்திய அணி மறைக்க தேவையில்லை என்பதே எனது கருத்து என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 15 இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 165 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். சொந்த மண்ணில் நடந்த 2 டெஸ்ட் தொடர்களிலும் சோபிக்க தவறிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவிலும் ரன்கள் குவிக்க முடியாமல் திணறினார். கேப்டன்சியிலும் மோசமாக செயல்பட்டதால், வேறு வழியின்றி ரோஹித் சர்மாவை நீக்கும் முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்துள்ளது.

Story first published: Friday, January 3, 2025, 9:27 [IST]
Other articles published on Jan 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+