Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த கேப்டனும் செய்யாத படுமோசமான சாதனையை செய்த ரோஹித் சர்மா.. காலி செய்த பாட் கம்மின்ஸ்

மெல்போர்ன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் மோசமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி 6.20 ஆகும். அவர் அதிகபட்சமாக 10 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மோசமான ஃபார்ம் காரணமாக தவித்து வருகிறார்.

ind vs aus rohit sharma india vs australia test match vs

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை விக்கெட்டை பறிகொடுத்த கேப்டன் என்ற விசித்திரமான, அதே சமயம் படுமோசமான சாதனையை செய்து இருக்கிறார் ரோஹித் சர்மா. இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-இடம் நான்கு முறை தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரோஹித்.

அதிலும் நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த தொடருக்கு முன்னர் இரண்டு முறை கம்மின்ஸ் பந்துவீச்சில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்து இருந்தார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆறு முறை ரோஹித் சர்மா தனது விக்கெட் இழந்து இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் எதிரணி கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்த கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். முன்னதாக இங்கிலாந்து கேப்டன் டெட் டெக்ஸ்டர், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிச்சி பெனாடின் பந்துவீச்சில் ஐந்து முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்.

அதே போல, இந்திய அணியின் கேப்டனாக இருந்த சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் கான் பந்து வீச்சில் ஐந்து முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். இந்த இரண்டு மோசமான சாதனைகளை தற்போது ரோஹித் சர்மா முறியடித்து இருக்கிறார். ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடருடன் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Monday, December 30, 2024, 14:35 [IST]
Other articles published on Dec 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+