Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்னப் பையன் தான்.. ஆனா ஆட்டம் வேற மாதிரி.. இளம் வீரர் ஆடிய ஆட்டம்.. சிக்கலில் ரோஹித்!

மெல்போர்ன் : இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மாவுக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறார் இளம் வீரர் ஷுப்மன் கில்.

ரோஹித் சர்மாவுக்கும் டெஸ்ட் போட்டிக்கும் ஆகவே ஆகாதோ என தோன்றும் அளவுக்கு அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில் எப்போதும் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அந்த சிக்கல்கள் பல மடங்காக தொடர்ந்து வருகிறது. அதன் அடுத்தகட்டமாக ஷுப்மன் கில் உருவெடுத்துள்ளார்.

ரோஹித் நிலை

ரோஹித் நிலை

ரோஹித் சர்மா நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டு பின் கடந்த ஆண்டு தான் அணியில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். துவக்க வீரராக முதல் தொடரிலேயே அவர் அதிரடியாக ரன் குவித்து தன் முத்திரையை பதித்தார்.

டெஸ்ட் தொடர் தேர்வு

டெஸ்ட் தொடர் தேர்வு

அதன் பின் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது காயம் காரணமாக ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. பின் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பும் அவர் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியா சென்றார்

ஆஸ்திரேலியா சென்றார்

பின் நீண்ட குழப்பங்களுக்கு பின் அவரை மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட்டில் பங்கேற்கும் வகையில் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தது பிசிசிஐ. அதிலும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. முதலில் அவர் போட்டிக்கு முன் தன் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என கூறி உள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

ப்ரித்வி ஷா - கில்

ப்ரித்வி ஷா - கில்

அடுத்ததாக துவக்க வீரராக ரோஹித் சர்மா ஆட வேண்டும் என்றால், யாரை நீக்குவது என்ற குழப்பம் எழுந்துள்ளது. முதல் டெஸ்டில் ப்ரித்வி ஷா மோசமாக ஆடிய நிலையில் அவரை நீக்கி விட்டு ஷுப்மன் கில் துவக்க வீரராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

ஷுப்மன் கில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒருநாள் போட்டி போல விரைவாக ரன் குவித்தார். முதிர்ச்சி அடைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் முதல் இன்னிங்க்ஸில் 65 பந்துகளில் 45 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் குவித்தார் ஷுப்மன் கில்.

மூன்றாவது டெஸ்ட் வாய்ப்பு

மூன்றாவது டெஸ்ட் வாய்ப்பு

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரை அணியில் இருந்து நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை இடம் பெற வைப்பது கடினம் என்றே கருதப்படுகிறது. ஷுப்மன் கில்லை நீக்கினால் அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும்.

மயங்க் அகர்வால்?

மயங்க் அகர்வால்?

மற்றொரு துவக்க வீரர் மயங்க் அகர்வால் முதல் டெஸ்டில் ஓரளவு தாக்குப்பிடித்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆனார். இரண்டாம் இன்னிங்க்ஸில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்கு பதில் ரோஹித் சர்மாவை களமிறக்க சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, December 30, 2020, 11:26 [IST]
Other articles published on Dec 30, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+