
கேள்வி
ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தை சுட்டிக் காட்டி ரோஹித் சர்மா டெஸ்ட் அணி உட்பட எந்த அணியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ரோஹித் இல்லாவிட்டால் யாரை துவக்க வீரராக ஆட வைப்பது என்ற கேள்வி எழுந்தது.

மூன்று வீரர்கள்
அப்போது தேர்வுக் குழு மயங்க் அகர்வால் தவிர்த்து மூன்று துவக்க வீரர்களை அணியில் தேர்வு செய்தது, கேஎல் ராகுல், ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் என மூவர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் யாரை ஆட வைப்பது என்பது கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கையில் தான் உள்ளது.

ரோஹித் நிலை
தற்போது ரோஹித் சர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து தான் ஆட முடியும் என்ற நிலை உள்ளது முதல் இரண்டு போட்டிகளில் எப்படியும் வேறு துவக்க வீரர் தான் ஆட வேண்டும். ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் தான் மயங்க் அகர்வாலுடன் துவக்க வீரராக ஆடக் கூடும்.

சதம் அடித்தால்..
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் சிறப்பாக ஆடி சதம் அடிக்கும் பட்சத்தில் அந்த துவக்க ஜோடியை மாற்ற முடியாது என்ற விவாதம் எழும். அந்த காரணத்தை வைத்தே ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் மறுக்கப்படும்.

திட்டமே இல்லை
தற்போது பயிற்சிப் போட்டியில் ஷுப்மன் கில் சிறப்பாக ஆடி உள்ளார். கேஎல் ராகுலுக்கும் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கக் கூடும். இந்த நிலையில், ரோஹித் சர்மா வரவை இந்திய அணி நிர்வாகம் தங்கள் திட்டத்தில் சேர்க்கவே இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

புறக்கணிப்பு
ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். பின்னர் அவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக சேர்க்கப்பட்டார். இந்தியாவில் அவர் அதிரடியாக ரன் குவித்த நிலையில் அணியின் நிரந்தர வீரர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.

சந்தேகம்
ஆனால், தற்போது அவரை மீண்டும் நீக்க முயற்சிகள் நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடிய வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என யாராலும் வாதாட முடியாது. எனவே, மூன்றாவது அல்லது நான்காவது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா இடம் பெறுவதும் கடினமே!


Click it and Unblock the Notifications











