Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ரோஹித் செய்த அலட்சிய செயல்.. வெளியே போன பந்தை தொட்டு.. 8 மாத காத்திருப்புக்கு ஏமாற்றம்

பெர்த்: 'ஹிட்மேன்' ரோஹித் சர்மாவின் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வெறும் 14 பந்துகளில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நொறுக்கிவிட்டு, அவர் பெவிலியன் திரும்பினார். அதுவும், சாதாரணமாக வெளியே சென்ற ஒரு பந்தை, தேவையே இல்லாமல் தொட்டு ஆட்டமிழந்த விதம், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இனி ஆடப் போகும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எட்டு மாதங்களுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்றனர். அவர்கள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.

IND vs AUS Rohit Sharma Out for 8 runs After 8-Month Wait Fans Upset Over Unnecessary Shot in 1st ODI

இந்திய இன்னிங்ஸைத் தொடங்கிய ரோஹித் சர்மா, தொடக்கத்தில் நிதானமாக ஆடினார். ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்திருந்த அவர், மெதுவாக தனது இயல்பான ஆட்டத்தை ஆட முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆட்டத்தின் 4-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை, ஹேசில்வுட் தனது வழக்கமான 'ஹார்ட் லென்த்'-ல், ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே வீசினார்.

பந்து, எதிர்பார்த்ததை விட சற்றே அதிகமாக எகிறி, வெளியே சென்றது. ஒரு அனுபவமிக்க வீரராக, அந்தப் பந்தை ரோஹித் சர்மா எளிதாக விட்டிருக்கலாம். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அந்தப் பந்தை லேசாக தொட்டு விளையாட முயன்றார்.

விளையாட்டு வினையானது!

அந்தச் சிறிய தொடுதலே வினையானது. பந்து, பேட்டின் வெளிப்புற விளிம்பில் பட்டு, நேராக இரண்டாவது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த மாட் ரென்ஷாவின் கைகளுக்குச் சென்றது. ரென்ஷா, எந்தத் தவறும் செய்யாமல், எளிதாக அந்த கேட்சைப் பிடித்தார். ஒட்டுமொத்த மைதானமும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தது. 14 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில், ரோஹித் சர்மா ஏமாற்றத்துடன் தலையைக் குனிந்தபடி பெவிலியன் திரும்பினார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அவரது இன்னிங்ஸ் இவ்வளவு விரைவாக முடிவுக்கு வந்தது, அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அது ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்தே அல்ல. சாதாரணமாக வெளியே சென்ற ஒரு பந்தை, தேவையே இல்லாமல் தொட்டு ஆட்டமிழந்தது, அவரது அனுபவத்திற்கு அழகல்ல என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு கடினமான தொடரில், ஒரு மூத்த வீரராக, அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் இருந்தது. ஆனால், அவர் அதைச் செய்யத் தவறினார். ரோஹித்தின் இந்த ஆட்டமிழப்பு, இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது விக்கெட்டைத் தொடர்ந்து, விராட் கோலியும் ஏமாற்றினார். இந்திய அணி 21 ரன்களுக்கு ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் கோலி விக்கெட்களை இழந்தது.

Story first published: Sunday, October 19, 2025, 9:42 [IST]
Other articles published on Oct 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+