Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னங்க ஆச்சு? பாதி மேட்ச்சில் வெளியேறிய 2 சீனியர் வீரர்கள்.. பதறிய ரசிகர்கள்!

Recommended Video

IND VS AUS 2nd ODI | Rohit Sharma and Dhawan injured, not fielded

ராஜ்கோட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியஅணியின் இரண்டு மூத்த வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் பீல்டிங் செய்தனர்.

அந்த இருவர் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான். தவான் பேட்டிங் மட்டுமே செய்தார். பந்துவீச்சின் போது முழுவதுமாக அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

ரோஹித் சர்மா பீல்டிங் செய்த போது, கடைசி சில ஓவர்கள் காணாமல் போனார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1 - 1 என்ற நிலையை அடைந்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா - தவான் அபார துவக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், தவான் நீடித்து நின்று பேட்டிங் செய்தார்.

தவான் அபாரம்

தவான் அபாரம்

90 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார் ஷிகர் தவான். நான்கு ரன்களில் சதத்தை தவறவிட்டாலும், அணிக்கு பெரிய அளவில் உதவினார். அடுத்து கோலி 78, ராகுல் 80 ரங்கள் குவித்தனர்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 340 ரன்கள் குவித்தது, ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தத இந்திய அணியின் பந்துவீச்சின் போது தவான் பீல்டிங் செய்ய வரவில்லை.

தவான் காயம்

தவான் காயம்

தவான் பேட்டிங் செய்த போது அவர் உடலில் பந்து பலமாக தாக்கியது. அதன் பின்னும் அவர் பேட்டிங் செய்தார். ஆனால், அவரால் பீல்டிங் செய்ய முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து பரிசோதனைகள் நடந்தது.

பீல்டிங் வரவில்லை

அப்போது அவர் பீல்டிங் செய்ய வராததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். தவான் நிலை குறித்து பிசிசிஐ உடனடியாக விளக்கம் அளித்தது. அவர் இந்தப் போட்டியில் பீல்டிங் செய்ய மாட்டார். அவருக்கு பதிலாக சாஹல் மாற்று வீரராக பீல்டிங் செய்வார் என கூறி இருந்தது பிசிசிஐ.

ரோஹித் சர்மா காயம்

ரோஹித் சர்மா காயம்

தவான் காயம் ஒருபுறம் என்றால், 43வது ஓவரின் போது ரோஹித் சர்மா பந்தை பிடிக்க கீழே பாய்ந்து இடதுகை தோள்பட்டையில் கடும் வலி ஏற்பட்டது. அதனால், அவரும் அப்போது ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

தவானுக்கு பதில் சாஹல் போட்டி முழுவதும் பீல்டிங் செய்தார். ரோஹித் சர்மாவிற்கு பதில் கேதார் ஜாதவ் பீல்டிங் செய்தார். இந்த இரண்டு மூத்த வீரர்கள் தவிர ஒரு இளம் வீரரும் காயம் காரணமாக சில ஓவர்கள் வெளியே சென்றார்.

நவ்தீப் சைனி

நவ்தீப் சைனி

அந்த இளம் வீரர் நவ்தீப் சைனி தான். அவர் முதல் ஓவரின் போது காலில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். பின் சில ஓவர்கள் கழித்து மீண்டும் வந்து பந்துவீசினார். அவருக்கு பெரிய காயம் எதுவும் எற்படவில்லை.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

ரோஹித் சர்மா, தவான் களத்தில் இல்லாத போது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். மேலும், அவர்களுக்கு ஏற்பட்ட காயம் என்ன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது? என ரசிகர்கள் தங்கள் பதற்றத்தை வெளிப்படுத்தினர்.

Story first published: Saturday, January 18, 2020, 8:23 [IST]
Other articles published on Jan 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+