Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி இல்லை.. ரோஹித்தை நம்பினோம்.. இப்படி பண்ணிட்டாரே.. முன்னாள் வீரர் புலம்பல்!

சிட்னி : சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 309 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

ரோஹித் சர்மா விக்கெட் வீழ்ந்த நிலையில் இந்தியா வெல்ல வாய்ப்பே இல்லை என கூறி உள்ளார் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 407 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது ஆஸ்திரேலிய அணி. இந்தியா அந்த இலக்கை நோக்கி நான்காம் நாள் பின்பகுதியில் பேட்டிங் செய்தது.

இந்தியா நிலை

இந்தியா நிலை

ரோஹித் சர்மா 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷுப்மன் கில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 98 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து களத்தில் உள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் மட்டும் இருக்கும் நிலையில் 309 ரன்கள் எடுக்க எடுத்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும்.

நம்பிக்கை போனது

நம்பிக்கை போனது

இது பற்றி பேசிய சஞ்சத் மஞ்ச்ரேக்கர், ரோஹித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், இந்தியா இலக்கை எட்டுவது கடினமே. விராட் கோலி இல்லாத நிலையில், அணி ரோஹித் சர்மாவை நம்பித் தான் இருந்தது. அவர் விக்கெட், இருந்த கொஞ்ச நம்பிக்கையையும் தகர்த்துள்ளது என்றார்.

களத்தில் யார்?

களத்தில் யார்?

இந்திய அணியில் தற்போது புஜாரா - ரஹானே களத்தில் உள்ளனர். அவர்கள் நீண்ட நேரம் களத்தில் நின்றால் இந்திய அணி டிரா செய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவின் அதிரடியான வேகப் பந்துவீச்சுக்கு முன் இந்தியா சமாளிப்பது கடினம் தான்.

Story first published: Sunday, January 10, 2021, 18:36 [IST]
Other articles published on Jan 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+