Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கண்டிப்பா ஆடுவார்.. இந்திய அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்.. பிசிசிஐ பரபர தகவல்!

மும்பை : இந்திய அணி டெஸ்ட் தொடரில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வரும் நிலையில் பிசிசிஐ மூத்த வீரர் ஒருவரை அணியில் சேர்க்க கடும் முயற்சி எடுத்து வருகிறது.

டெஸ்ட் அணியில் மட்டுமே சேர்க்கப்பட்ட ரோஹித் சர்மா உடற்தகுதி சிக்கலால் ஆஸ்திரேலியா செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

அவரை இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா அனுப்ப உள்ளது பிசிசிஐ.

ரோஹித் நீக்கம்

ரோஹித் நீக்கம்

ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்ற இந்திய ஒருநாள் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பின் அவர் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்கப்பட்டார்.

இந்தியா சென்றார்

இந்தியா சென்றார்

அவருக்கு காயம் இருந்ததால் அவர் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் ஆஸ்திரேலியா செல்லாமல் இந்தியா திரும்பி இருந்தார். பின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

சிக்கல்

சிக்கல்

அவர் முழு உடற்தகுதி பெற்றதாக தேசிய கிரிக்கெட் அகாடமி ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், டிசம்பர் 11 அன்று அவருக்கு உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளது.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

ரோஹித் சர்மா காயத்தில் இருந்து நன்கு குணமடைந்து விட்ட நிலையில் அவரை எப்படியாவது ஆஸ்திரேலியா அனுப்ப பிசிசிஐ கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஆஸ்திரேலியா சென்றால் 14 நாட்கள் குவாரன்டைனில் அவர் இருக்க வேண்டும் என்பதால் சிக்கல் உள்ளது.

எப்போது இணைவார்?

எப்போது இணைவார்?

அவரால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாது. எனினும், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் பலம் பெறும் என கருதப்படுகிறது.

கோலி இல்லாத நிலையில்..

கோலி இல்லாத நிலையில்..

விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா திரும்ப உள்ளார். கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளை அவர் இல்லாமல் தான் இந்திய அணி சந்திக்க உள்ளது. எனவே, ரோஹித் சர்மா வரவு இந்திய அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

Story first published: Monday, December 7, 2020, 19:23 [IST]
Other articles published on Dec 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+