Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா தொடக்க வீரராக வர மாட்டார்.. ஆனால் இந்த ஸ்டார் வீரரின் இடம் காலி! மஞ்சுரேக்கர் கணிப்பு

அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் ஜெய்ஸ்வாலும் அபாரமாக விளையாடியதால் ரோகித் சர்மா இடம் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதனால் ரோஹித் சர்மா பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்க வேண்டும் என்று விவாதங்கள் எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், ரோகித் சர்மா தொடக்க வீரராக இரண்டாவது டெஸ்டில் களமிறங்க மாட்டார் என்று கணித்திருக்கிறார்.

ind vs aus rohit sharma pink ball test border gavaskar trophy

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், என்னை பொருத்தவரை ரோகித் சர்மா தொடக்க வீரராக வரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் தொடக்க வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களை மாற்றுவது என்பது சரியான முடிவாக இருக்காது.

இதை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் வரிசையில் இடத்தை மாற்றிக் கொள்வார். தொடக்க ஜோடி முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியாவில் பார்ட்னர்ஷிப்பை சேர்த்து இருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு ஜோடியை மாற்ற எந்த ஒரு அணி நிர்வாகமும் யோசிக்க மாட்டார்கள்.

அதுவும் ரோகித் சர்மாவின் சமீப கால பார்ம் சரியில்லை. எனவே ரோகித் சர்மா தாமே பேட்டிங் வரிசையில் கீழே செல்கிறேன் என்று கூற வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர்தான் கேப்டன். ரோஹித் சர்மா அப்படி செய்தால் அது தான் சரியான முடிவாக இருக்கும்.இந்த நிலையில் முதல் டெஸ்டில் கில் விளையாடவில்லை. இதனால் கில் இரண்டாவது டெஸ்டில் ஐந்தாவது வீரராக விளையாடி அணியில் வெற்றிக்கு ரன்களை சேர்க்கலாம்.

இதனால் ரோகித் சர்மா மூன்றாவது வீரராக விளையாடக் கூடும். ஆனால் மூன்றாவது வீரருக்கும் தொடக்க வீரருக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இருக்காது. ஆனால் ஐந்தாவது வீரராக களம் இறங்குவது சரியான முடிவாக இருக்கும். எனினும் ரோஹித் சர்மா மூன்றாவது வீரராக களமிறங்கலாம். அதுவும் நல்ல சமரசமாகவே இருக்கும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 3, 2024, 23:11 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+