Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படியே டீமில் சேர்க்க முடியாது.. ஒருவாரம் டைம்.. இதையெல்லாம் செய்யணும்.. ரோஹித் சர்மாவுக்கு செக்!

சிட்னி : ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா சென்றாலும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட அத்தனை எளிதில் வாய்ப்பு கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

பிசிசிஐ அவருக்கு மீண்டும் உடற்தகுதி பரிசோதனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பின்பே அவருக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்குமாம். இதன் இடையே குவாரன்டைனிலும் அவர் என்னென்ன செய்ய வேண்டும் என லிஸ்ட் போட்டுக் கொடுத்துள்ளது பிசிசிஐ.

ரோஹித் நிலை

ரோஹித் நிலை

ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதலில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு காயம் இருந்ததால் அவரை தேர்வு செய்யவில்லை என்றது பிசிசிஐ. பின்னர் அழுத்தம் காரணமாக அவரை டெஸ்ட் அணியில் சேர்த்தது. அவர் இந்தியாவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்தை குணப்படுத்தி இருந்தார்.

உடற்தகுதி பரிசோதனை

உடற்தகுதி பரிசோதனை

அதன் பின் அவருக்கு உடற்தகுதி பரிசோதனை செய்ய தாமதம் செய்தது தேசிய கிரிக்கெட் அகாடமி. டிசம்பர் 11 அன்று தான் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் தேர்ச்சி அடைந்தார். ஆஸ்திரேலியா கிளம்பவும் தயார் ஆனார்.

மீண்டும் சிக்கல்

மீண்டும் சிக்கல்

ஆனால், தற்போது மீண்டும் ஒரு சிக்கல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அவர் இரண்டு வார குவாரன்டைன் முடிந்து மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு தான் போட்டியில் ஆட தயார் ஆவார். அதற்கு முன் அவர் தன் உடற்தகுதியை மீண்டும் பிசிசிஐ மருத்துவர்களிடம் நிரூபிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

ஒரு வாரம்

ஒரு வாரம்

இதற்கிடையே குவாரன்டைனில் அவர் ஒரு வாரம் சில பயிற்சிகளை செய்து போட்டிக்கு தயார் ஆக வேண்டும் என பிசிசிஐ அவருக்கு அறிவுறுத்தி உள்ளது. அந்த பயிற்சிகளை அவர் செய்தால் மட்டுமே போட்டியில் ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

இதையும் தாண்டி இந்திய அணி நிர்வாகம், அதாவது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் அஜின்க்யா ரஹானே மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒப்புதல் அளித்தால் மட்டுமே ரோஹித் சர்மா போட்டிகளில் பங்கேற்க முடியும்.

கோலி இல்லை

கோலி இல்லை

முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் விராட் கோலி அணியில் இடம் பெற மாட்டார் என்ற நிலையில் திறமையான பேட்ஸ்மேன் ஆன ரோஹித் சர்மாவை ஆட வைக்க முயற்சி செய்யாமல் அவரை ஆட விடாமல் செய்யவே பிசிசிஐ முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Saturday, December 12, 2020, 17:18 [IST]
Other articles published on Dec 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+