Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: ஏன் நடிக்கிறீங்க? அந்த வீரரை சும்மா ஏன் அணியில் வச்சிருக்கீங்க? சபா கரீம் கேள்வி

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்துள்ள இந்திய அணி குறித்து தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு கில், புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் தேர்வு குழு எடுத்திருக்கும் முடிவு மிகவும் தவறானது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ரோகித் சர்மாவை கேப்டனாக நீங்கள் அறிவிக்கவில்லை என்றால் எதற்காக அவரை அணியில் வைத்திருக்கிறீர்கள்.

Ind vs Aus

நீங்கள் பேசும்போதே தெளிவாக தெரிகிறது ரோகித் சர்மா உங்களுடைய உலகக்கோப்பை திட்டத்தில் இல்லை. அப்படி இருக்கும்போது எதற்காக ஒரு வீரரை தேவையில்லாமல் அணியில் வைத்திருக்கிறீர்கள். அவர் கேப்டனும் கிடையாது. உங்கள் அணியின் வீரரும் கிடையாது என்றால் ரோகித் சர்மா அணியில் தேர்வு செய்யப்படாமலேயே இருந்திருக்கலாம்.

இதனால்தான் நான் சொல்கின்றேன். ரோகித் சர்மா விஷயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறார்கள். இது கொஞ்சம் கூட தேவையே இல்லாத ஒரு விஷயம். கில்லை டி20 அணியின் துணை கேப்டனாக அறிவித்திருக்கிறீர்கள். தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமித்து விட்டீர்கள். இனி அடுத்த சீசனில் கில் தான் அனைத்து விதமான கிரிக்கெட்டின் இந்திய கேப்டன் ஆகவும் விளங்கப் போகிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது உங்களுடைய முடிவு சரியாக தான் இருக்கலாம். ஆனால் கில்லை தவிர வேறு எந்த ஒரு வீரரும் தலைமை பண்புக்கு சரியாக இல்லை என்பது போல் உங்களுடைய முடிவு இருக்கின்றது. இதனால்தான் கில்லை நீங்கள் கேப்டனாக அறிவித்திருக்கிறீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒரு நல்ல கேப்டன் நல்ல பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்திருக்கிறார்.ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவருடைய திறமையை ஏற்கனவே நாம் அறிவோம். எனவே கேப்டனாக வர அனைத்து தகுதியும் கில்லுக்கு இருக்கிறது என்று கில் கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 5, 2025, 22:35 [IST]
Other articles published on Oct 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+