இப்படி ஒரு விக்கெட்கீப்பர் தான் தேவை.. அப்புறம் உங்க இஷ்டம்.. பண்ட்டுக்கு எதிராக களமிறங்கிய சாஹா!
மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் மீண்டும் தன் இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதலில் விரிதிமான் சாஹாவுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
சாஹா முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், பேட்டிங்கில் சொதப்பினார்.

ரிஷப் பண்ட்
இதை அடுத்து அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார். அவர் விக்கெட் கீப்பிங்கில் பல தவறுகளை செய்தார். ஆனாலும், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். மற்ற முழு நேர பேட்ஸ்மேன்களை விட ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினார்.

முதல் இடம்
மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடினாலும் அவர் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். தொடரை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில், சாஹாவுக்கு இனி அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எந்த போட்டியும் இல்லை
சாஹா இது பற்றி பேட்டியில் கூறுகையில், ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்வது குறித்து தான் சிந்திக்கவில்லை என்றும், தான் தன் பணியை எப்படி செய்யப் போகிறோம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், அவருடன் எந்த போட்டியும் இல்லை என்றும் கூறினார்.

ஸ்பெஷலிஸ்ட்
அதே சமயம் விக்கெட் கீப்பிங் பணி டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஸ்பெஷலிஸ்ட் பணி, ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டாலும் போட்டி போட்டியின் முடிவு மாறிவிடும். நான் எல்லா கேட்ச்களையும் பிடித்து விடுவேன் என் கூறவில்லை. ஆனால், அது தனித்துவமான பணி என்றார் சாஹா.


Click it and Unblock the Notifications