For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலியா போட்டுள்ள திட்டம்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் தந்த எச்சரிக்கை

பெர்த் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பேட்டிங் சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்க வேண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் சச்சினுக்கு பிறகு அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்றால் அது விராட் கோலி தான்.

கடந்த முறை விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்று குழந்தை பிரசவத்திற்காக இந்தியா புறப்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் விராட் கோலி தற்போது அதிக ரன்கள் குவித்து அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ind vs aus virat kohli rohit sharma r ashwin


இந்த சூழலில் விராட் கோலியை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அணி புதிய திட்டம் தீட்டு இருப்பதாக இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தமக்கு எதிராக தற்போது ஆஸ்திரேலியா எந்த திட்டத்தை தீட்டி வைத்திருப்பார்கள் என்று விராட் கோலிக்கு நன்றாகவே தெரியும்.

முதலில் விராட் கோலிக்கு ஆப் சைடுக்கு வெளியே ஆஸ்திரேலியா பந்தை வீசி கோலி எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் கணக்கு போடுவார்கள். தற்போது எல்லாம் விராட் கோலி ஸ்டேம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விட்டுவிட்டு அடிக்க வேண்டிய பந்துகளை டிரைவ் செய்து ரன்களை சேர்க்கின்றார்.

இதனால் விராட் கோலிக்கு அந்த மாதிரி பந்துகளை ஆஸ்திரேலிய வீரர்கள் வீசமாட்டார்கள். விராட் கோலியின் உடலை குறி வைத்து பந்துகள் வீசப்படும். இதன் மூலம் விராட் கோலியால் ரன்கள் சேர்க்க முடியாது. இதே போன்ற ஒரு திட்டத்தை நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விராட் கோலிக்கு எதிராக செயல்பட்டார்கள்.

விராட் கோலி ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தை எதிர்பார்த்து கவனத்துடன் இருந்தார். ஹேசல்வுட் போன்ற வீரர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசி ஆட்டமிழக்க செய்து விடுவார்கள். இது போன்ற பல யுக்திகளை ஆஸ்திரேலியா வைத்திருக்கும். இதனை விராட் கோலி முற்றிலும் நிச்சயம் உணர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Story first published: Monday, November 18, 2024, 16:40 [IST]
Other articles published on Nov 18, 2024
English summary
Ind vs aus- Sanjay Manjrekar gives Warning to Virat kohli about australia bowling plan விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலியா போட்டுள்ள திட்டம்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் தந்த எச்சரிக்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+